நான் என் விஷயத்தில் இதை மாற்றப் போவது கிடையாது.. அபிஷேக் பத்தி சந்தோஷமா இருக்கு – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
60
Surya

நேற்று இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். மேலும் சூரியகுமார் யாதவ் மிடில் வரிசையில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பாக விளையாடி 22 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். இவர்களிடையே 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. சூரியகுமார் நேற்று பழைய பேட்டிங் ஃபார்மில் திரும்பி வந்தது போல் இருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் பலம்

ஒரு முனையில் சூரியகுமார் 32 ரன்கள் எடுக்க அது இந்திய அணி மிகப்பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாக அமைந்தது. இறுதிக்கட்டத்தில் அதிரடியாக 20 பந்துகளில் ரிங்கு சிங் 44 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இந்த வகையில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகப்பெரிய பலம் வாய்ந்ததாக இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் ஒவ்வொருவரும் அதிரடியாக விளையாடினாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இயல்பான ஆட்டம் இருக்கிறது. இதன் காரணமாக எதிரணி பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது கடினம். ஒருவர் போக ஒருவர் வந்து அடித்துக் கொண்டே இருப்பதால் எதுவும் செய்ய முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள்.

- Advertisement -

இதை மாற்ற மாட்டேன்

இந்த போட்டி குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “முதலில் பேட்டிங் செய்வது எப்போதும் நல்லதுதான். ஏனென்றால் அப்போது பெரிய அளவில் ரன்கள் குவித்து பனிப்பொழிவு வந்தாலும் ஸ்கோரை பாதுகாத்து வெற்றி பெற முடியும். எல்லா பேட்ஸ்மேன்களும் தங்களுக்கான வேலையை சரியாக செய்தார்கள். அதுதான் சிறந்த விஷயமாக எங்களுக்கு அமைந்தது”

இதையும் படிங்க : அர்ஸ்தீப் விளையாடினா மட்டுமே.. பும்ரா பெரிய அளவில் இந்திய அணிக்கு நன்மையா இருக்க முடியும்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

“நான் நேற்று பேட்டிங் செய்ய வந்த போது உணர்வு நன்றாக இருந்தது. வலைப்பயிற்சியிலும் நன்றாக பேட்டிங் செய்து கொண்டு இருக்கிறேன். இதை நான் அப்படியே தொடர வேண்டும். என் இயல்பை மாற்றக்கூடாது என்பது தான் முக்கியமான விஷயம். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். அபிஷேக் சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. அவர் இதற்காக சிறந்த முறையில் தயாராகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -