இன்று டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்த போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து கேப்டன் மிட்சல் சான்ட்னர் தங்கள் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.
இந்தியாவில் இந்தியா விளையாடும் பொழுது எதிரணிக்கு ஆதரவு என்பது சுத்தமாக இருக்காது. குறிப்பாக உலகக் கோப்பை மாதிரியான பெரிய போட்டிகளில் இந்திய ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் பக்கமே இருப்பார்கள். இதனால் எதிர் அணிகளுக்கு மனரீதியான பின்னடைவு ஏற்படும்.
சாதித்த ஆஸ்திரேலியா
அதேசமயத்தில் மிகப்பெரிய ஆதரவு இன்னொரு பின்னடைவை இந்திய அணிக்கு உருவாக்குகிறது. இந்த அழுத்தத்தை இந்திய வீரர்கள் எடுத்துக்கொண்டு சரியாக கையாள்வது சிக்கலான ஒன்றாக அமைகிறது. சொந்த மண்ணில் விளையாடினாலும் மிகப்பெரிய ரசிகர் படையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய அழுத்தம் இருக்கிறது.
மேலும் இந்திய அணிக்கு எங்காவது சிக்கல் எனும் பொழுது கூட்டம் மிகவும் அமைதியாகிவிடும். அந்த திடீர் அமைதி இந்திய அணிக்கு மனரீதியாக பின்னடைவை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் மிச்சல் சான்ட்னர் தங்கள் ரசிகர்களின் ஆதரவை கேட்டிருக்கிறார்.
உங்கள் ஆதரவு தொடர வேண்டும்
இதுகுறித்து மிட்சல் சான்ட்னர் பேசும்பொழுது “ஞாயிற்றுக்கிழமையில் உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். இங்கே எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மிகவும் குறைவாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்தியாவுக்கு 1.4 பில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் மைதானத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இந்தியாவுக்காக இருப்பார்கள். இது பிரச்சனை இல்லை. நம் நாட்டில் நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று தெரியும்”
இதையும் படிங்க : கிரிக்கெட்டின் நலனுக்காக இந்தியா பைனலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.. நியூசிலாந்து செய்திருக்கிறது – சோயப் அக்தர் கருத்து
“நீங்கள் எங்களுடன் இல்லாவிட்டாலும் நீங்கள் எங்கள் குறித்து பதிவு செய்கின்ற பதிவுகளை பார்க்கிறோம். மேலும் நம்முடைய நாட்டில் இந்த போட்டி அதிகாலையில் ஆரம்பிக்கிறது. எனவே நீங்கள் இதற்காக அலாரம் வைத்து எழுந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும். இதனால் நீங்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகத்திற்கு தாமதமாக சென்றால் நான் சொன்னதை சொல்லுங்கள். நன்றி நியூசிலாந்து மக்களே. நாங்கள் விரைவில் வீடு திரும்புவோம் என்று நம்புகிறேன். கூடுதலாக ஒரு உலகக் கோப்பையையும் கொண்டு வரலாம்” என்று கூறியிருக்கிறார்.






