நாளை நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கிரிக்கெட்டின் நலனுக்காக நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்திருக்கிறார்.
இந்த இரு அணிகளும் முதல் முறையாக டி20 உலக கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன. இந்திய அணி இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. நியூசிலாந்து அணி இன்னும் ஒரு முறை கூட வென்றதில்லை.
இந்தியா தயாராக இருக்கும்
இந்த நிலையில் இந்த இறுதி போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? எந்த அணி வெற்றி பெறுவது சரியானதாக இருக்கும்? என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் போது “அகமதாபாத் மைதானத்தில் ஸ்பின்னர்களுக்கு சாதகம் இருந்தால் 180 முதல் 200 ரன்கள் எடுக்க வேண்டும். இங்கு 200 ரன் என்பது சரியானதாக இருக்கும். ஆனால் நியூசிலாந்து வெளியால் 225 முதல் 250 ரன்கள் எடுக்க முடியுமா? அப்படி செய்தால் அது இந்திய அணிக்கு பெரிய அழுத்தமாக அமையும். மேலும் இந்திய அணி எல்லா விதத்திலும் தயாராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது”
இவர்கள்தான் வலிமையானவர்கள்
“இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது நியூசிலாந்து கொஞ்சம் சிக்கலில் சிக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பதால் இந்திய அணிக்கு அழுத்தம் இருக்கும். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என்று தெரிகிறது. ஆனால் கிரிக்கெட்டில் நலனுக்காக என்று பார்த்தால் இது நியூசிலாந்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டிய காலம் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க :
“நியூசிலாந்து வேகப்பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு இந்தியாவில் ஸ்பின் விளையாடிய அனுபவம் உள்ளது. சமீபத்தில் இந்திய அணியை அவர்கள் வென்று இருக்கிறார்கள். மேலும் இவர்கள் நம்மை தோற்கடித்தவர்கள் என்று இந்திய அணியும் நினைக்கலாம். எனவே நியூசிலாந்து அணிக்கும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கும். எனவே இது சிறந்த இறுதிப் போட்டியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






