3 விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து.. பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா! – முதல் நாள் முடிவில் யார் வலுவான நிலை?

0
699

ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 68 ரன்கள் அடித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஹெட்டிங்கிலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் எடுத்தது.

- Advertisement -

துவக்க வீரர் டேவிட் வார்னர் 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 13 ரன்களுக்கும் பிராட் மற்றும் மார்க் வுட் ஆகியோர்களின் பந்துவீச்சில் முறையே அவுட் ஆகினர். அடுத்துவந்த மார்னஸ் லபுச்சானே இம்முறையும் சோபிக்கவில்லை. 21 ரன்களுக்கு அவுட்டாகினர்.

அடுத்து வந்த ஸ்மித், ஸ்டூவர்ட் பிராட் பந்தில் 22 ரன்களுக்கு வெளியேறினார். 85 ரன்கள் இருக்கையில் நான்கு விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி தடுமாற்றம் கண்டிருந்தபோது, மிச்சல் மார்ஸ் அதிரடியை வெளிப்படுத்தி 118 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 200 ரன்களை கடந்தது.

டிராவிஸ் ஹெட் 39 ரன்களுக்கு அவுட் ஆன பிறகு, மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மார்க் வுட் 5 விக்கெட்டுகள் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

- Advertisement -

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இறங்கிய இங்கிலாந்து அணி சரியான துவக்கம் பெறாமல் தடுமாறியது. நல்ல ஃபார்மில் இருந்த துவக்க வீரர் பென் டக்கட் 2 ரன்கள், ஹாரி புரூக் 3 ரன்கள் என அடுத்தடுத்து கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார்.

சதம் அடித்து அசத்திய மிச்சல் மார்ஸ் பந்துவீச்சிலும் கலக்கினார். இவர் நன்றாக விளையாடி வந்த ஜாக் கிராலி விக்கெட்டை தூக்கினார். கிராலி 33 ரன்கள் அடித்திருந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் இருக்கின்றன. தற்போதுவரை இங்கிலாந்து அணி 195 ரன்கள் பின்தங்கியுள்ளது.