தப்பு கணக்கு போட்டுட்டிங்க பிசிசிஐ.. கோலி பதிலடிக்கு வெயிட்டிங்.. மார்ச் மோதல்!

0
2780
Virat

டி20 கிரிக்கெட் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அசுரத்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பெரிய கிரிக்கெட் அணிகள் அனைத்துமே, தங்களுக்கு என ஒரு தனி டி20 அணியை அமைக்க பெரிய முயற்சிகள் செய்து வருகின்றன.

இந்திய அணி உலக கிரிக்கெட்டில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டக்கூடிய அணியாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் அதிக ஆதிக்கம் செலுத்துவதால், அதிக டி20 போட்டிகள் விளையாட வேண்டி இருக்கும். எனவே அதிக வெற்றிகள் பெற நல்ல டி20 அணி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேவைப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட ஒரு அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விரும்பியது. இதன் காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோர் வெளியே அனுப்பப்பட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்காக இவர்கள் டி20 கிரிக்கெட் விளையாடவில்லை என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின்பு, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நோக்கி தயாராகி வரும் நேரத்தில், ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச டி 20 கிரிக்கெட் விளையாடுவார்களா? விளையாட விரும்பினால் வாய்ப்பு தரப்படுமா? என்பது கேள்வியாக இருக்கிறது.

இது குறித்து ஆரம்பத்தில் இவர்கள் இருவருமே முடிவெடுக்கலாம் என்று பிசிசிஐ கூறியதாக செய்திகள் வந்தன. அதற்கு அடுத்த இரண்டு மூன்று நாட்களிலே ரோகித் சர்மா கேப்டனாக தொடரலாம் ஆனால் விராட் கோலிக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடையாது என்று கூறப்பட்டது. மூன்றாவது இடத்தில் மட்டும் இல்லாமல் துவக்க வீரராகவும் அவருக்கு வாய்ப்பு கிடையாது என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இந்திய டி20 அணியில் மூன்றாம் இடத்தில் நிலையாக விளையாடும், ஆங்கர் ரோல் செய்யும் பேட்ஸ்மேன் தேவை இல்லை என்று நினைக்கிறது. இதன் காரணமாக விராட் கோலியை ஒதுக்கி வைக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் கூறுகிறது. இந்த இடத்தில்தான் பிசிசிஐ தப்பு கணக்கு போட்டு இருக்கிறது.

ஏனென்றால், அடுத்த டி20 உலகக் கோப்பை நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா பெரிய ரன்கள் அடிக்கும் ஆடுகளங்களைக் கொண்டது கிடையாது. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் மற்றும் மெதுவான ஆடுகளமுமே அதிகம் இருக்கும். இங்கு எல்லா பந்துகளையும் அதிரடியாக விளையாட முடியாது. விராட் கோலி போல பந்துக்கு தகுந்தவாறு, ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் தேவை.

மேலும் இப்படியான ஆடுகளங்களில் விளையாட ஒருபுறம் விராட் கோலி போல திறமையும், கூடவே அவரிடம் இருக்கும் நீண்ட அனுபவமும் மிகக் கட்டாயம் அவசியம். இந்த நிலையில்தான் பிசிசிஐ இப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் கூறுகிறது. பிசிசிஐ உண்மையில் இதை தனது திட்டமாக வைத்திருந்தால், அது விராட் கோலிக்கு நஷ்டமாக முடியாது. நிச்சயம் இந்திய அணிக்கும் பிசிசிஐக்குமே நஷ்டமாக முடியும் என்பது உறுதி. மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் தான் யார் என்பதை காட்ட விராட் கோலி நிச்சயம் காத்திருப்பார்!