மில்லர் கிளீன் எட்ஜ்.. ரிவ்யூ இருந்தும் DRS எடுக்க முடியாமல் சிக்கிய இந்தியா.. என்ன நடந்தது?

0
925
Jadeja

தற்பொழுது இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்றாவது போட்டி ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது..

இந்தப் போட்டியில் டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். ஜெய்ஸ்வால் 61 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 201 ரன்கள் குவித்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே வந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் கொஞ்சம் குறைந்துவிட்டது.

இந்த நிலையில் இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த முறை வேகமாக விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தது. முதல் ஐந்து விக்கெட்டுகள் பெரிய ரன் பங்களிப்பு எதுவும் தராமல் வெளியேறின.

இந்த நிலையில் டேவிட் மில்லர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை குறி வைத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்தார். அங்கிருந்து ஆட்டம் கொஞ்சம் தென் ஆப்பிரிக்க பக்கம் நகர்வது போல தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அதே ஓவரில் ஜடேஜா டேவிட் மில்லருக்கு பந்தை கொஞ்சம் வெளியில் வீசினார். இந்தப் பந்து பேட்டில் பட்டு கீப்பரின் கைகளுக்கு சென்றது. கிளீன் எட்ஜ் என்பதற்கான சத்தம் தெளிவாக கேட்டது. ஜடேஜா நடுவரிடம் அவுட் அப்பில் கேட்க நடுவர் தரவில்லை.

இந்தியாவின் கைகளில் இரண்டு ரிவ்யூ இருந்தும் கூட இந்தியாவால் டிஆர்எஸ் எடுக்க போக முடியவில்லை. காரணம் குறிப்பிட்ட நேரத்தில் டிஆர்எஸ் வேலை செய்யவில்லை என்று இரு அணிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த துரதிஷ்டமான காரணத்தினால் இந்திய அணி ரிவ்யூ செய்ய முடியவில்லை.

இதேபோல் கடந்த முறை சென்னை மும்பை அணிகள் ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட போட்டியில், சென்னை வீரர் கான்வே ரிவ்யூ சிஸ்டம் வேலை செய்யாத காரணத்தினால் பரிதாபமாக ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.