ரோகித் விஷயத்தில் முட்டாள்தனம் பண்றிங்க.. இதை பண்றது ரொம்ப தப்பு – மைக் ஹஸ்ஸி ஓபன் பேட்டி

0
197
Hussey

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி அதிரடியான கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத ரோகித் சர்மா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவது குறித்து எதிர்மறையான பல கருத்துக்கள் இந்திய ரசிகர்களிடமிருந்து முன்வைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எந்த இடத்தில் ரோகித் சர்மா ஆடுவார்?

சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோகித் சர்மா நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தார். முதல் மூன்று இடங்களில் ஜெய்ஸ்வால் கேஎல்.ராகுல் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். ரோகித் சர்மா மூன்று ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா துவக்க ஜோடியை மாற்ற விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. மேலும் கில் அவருடைய மூன்றாவது இடத்தில் தொடர்ந்து களமிறங்கவும் ரோகித் சர்மா விரும்புகிறார் என்பதும் தெரிந்தது. அதே சமயத்தில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் விளையாடும் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் இடங்கள் அப்படியே இருக்கும். எனவே ரோகித் சர்மா ஆறாவது இடத்தில் விளையாடுவதற்கான அதிகபட்ச அறிகுறிகள் தெரிகிறது.

- Advertisement -

முட்டாள்தனத்தை செய்யக்கூடாது

இந்திய அணியில் சூழ்நிலைகள் எப்படி இருக்க, இந்திய தரப்பில் இருந்தே இந்திய ரசிகர்கள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடக்கூடாது என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விளையாடாமல் இரண்டாவது டெஸ்ட்டுக்கு வந்தால் அது குழப்பங்களை உண்டாக்கும் என கவாஸ்கரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 20 ரன் 10 விக்கெட்.. கொத்தாக விழுந்த ஜிம்பாப்வே.. பாகிஸ்தான் அணி 5 ஓவர் வெற்றி.. தொடரை வென்றது

இதுகுறித்து மைக்கேல் ஹஸ்ஸி கூறும்பொழுது “ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மைதானத்திற்கு பெரிய அளவில் கூட்டத்தைக் கொண்டு வரக்கூடியவர்கள். மேலும் சிறந்த தரம் கொண்ட பேட்ஸ்மேன்கள். நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய முட்டாள்தனமான விஷயம் என்னவென்றால் இப்படியான சாம்பியன் வீரர்களை நீக்குவதுதான். நான் பலமுறை பார்த்திருக்கிறோம் அவர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிறார்கள். ஆனால் இந்த வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சாதிப்பதற்கு நான் ஆதரவு தருகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -