ரோகித் சர்மாவை பார்த்து கத்துக்கோங்க – மைக் ஹஸ்சி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு அறிவுரை!

0
779
Mike Hussey

பார்டர் கவாஸ்கர் தொடரில் தற்பொழுது 4 போட்டிகளில் இரண்டு போட்டிகள் முடிந்து, தொடரின் மறுபாதி தொடக்கத்திற்காகக் காத்திருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் வென்று இந்திய அணி இந்த தொடரை இனி தோற்க முடியாத நிலையில் இருக்கிறது!

இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் இரண்டு போட்டிகளை வென்று கைப்பற்றும் என்றே கூறப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால் தொடர் ஆரம்பித்த முதல் நாளே கணிப்புகளுக்கு எதிர் மாறாக விஷயங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. ஆஸ்திரேலியா நட்சத்திர பேட்ஸ்மேன்கள் சறுக்க, இந்திய பவுலிங் ஆல்ரவுண்ட் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன்கள் குவித்தார்கள்.

அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஓரளவுக்கு முதல் இரண்டு நாட்களில் முன்னேறி ஆட்டத்தை கைக்குள் வைத்திருந்து, மூன்றாவது நாளின் தொடக்கத்தில் 48 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை தந்து அப்படியே சரிந்து தோற்றது. குறிப்பாக ஆஸ்திரேலியா ஸ்வீப் ஷாட் ஆடி தங்களது விக்கட்டுகளை வரிசையாக பறி கொடுத்தார்கள். இந்தத் தொடரில் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாதான் மிகச் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் மட்டுமே ஒரு சதம் அடித்திருக்கிறார்.

இது குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் மைக்கேல் ஹஸ்சி கூறும்பொழுது
” வெளிப்படையாக சொல்கிறேன் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் புத்தகத்தில் இருந்து அவர் பேட்டிங் செய்த விதத்தை எடுத்து பார்க்கலாம். ரோகித் சர்மா தனது வேலையை செய்த விதம் நிச்சயமாக இது போன்ற சூழ்நிலையில், நிலைமையைச் சமாளிக்கவும் ரன்கள் கொண்டு வரவும் ஒரு சிறந்த வழியாகும். இந்திய பேட்ஸ்மேன்கள் இது போன்ற ஆடுகளங்களில் விளையாடி வளர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இதற்கு பழகி விட்டார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே திருப்பி நம்மால் செய்துவிட முடியாது. குறிப்பாக மேத்யூ ஹைடன் போல என்னால் விளையாட முடியாது” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் கவனம் ஒவ்வொருவரும் எவ்வளவு ரன்கள் எடுக்கிறோம் என்பதில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பேட்டிங் பாணியை கொண்டவர்கள். எனவே சிலர் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் சிலர் நிதானமாக விளையாட வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ஷாட்டை விளையாட முயற்சிப்பதற்கு பதிலாக, தங்கள் பலத்தில் என்ன விளையாட முடியுமோ அதை விளையாட முயற்சி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்!