விராட் கோஹ்லி பதவி விலகியதற்கும் டு பிளசிஸ் கேப்டனாக பதவி ஏற்றதற்கும் காரணம் இதுதான் – விளக்கம் அளிக்கும் மைக் ஹெசன்

0
131
Virat Kohli and Mike Hesson

2013ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மொத்தமாக ஒன்பது ஐபிஎல் தொடர்களில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வந்தது. விராட் கோலி தலைமையின் கீழ் 2016 ஆம் ஆண்டு பெங்களூர் அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

ஒன்பது ஆண்டுகாலம் பெங்களூரு அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த அவர் கடந்த ஆண்டுடன் தனது கேப்டன் பதவியை முடித்துக் கொண்டார். இந்நிலையில் இந்த ஆண்டு புதிய கேப்டனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் அறிவிக்கும் என்று அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

நீண்ட நாள் காத்திருப்பு நேற்று முடிவுக்கு வந்தது. பெங்களூர் அணி நிர்வாகம் தென்ஆப்பிரிக்கா வீரர் ஃபேப் டு பிளிசிஸ்சை புதிய கேப்டனாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஃபேப் டு பிளேசிஸ் ஏன் புதிய கேப்டன் ?

ஃபேப் டு பிளேசிஸ் எதற்காக கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என்கிற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அனைவரும் முன்னெடுத்து வைத்து அந்த கேள்விக்கு தற்போது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை நிர்வாக தலைவர் மைக் ஹெசன் தக்க பதிலளித்து இருக்கிறார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய சீனியர் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் புதிய கேப்டனாக ஃபேப் டு பிளேசிஸ்சை நியமிக்கும்படி ஆலோசனை வழங்கியதாக மைக் ஹெசன் தற்பொழுது கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர் விராட் கோலிக்கு சற்று ஓய்வு தேவை. இனி அவர் அணியின் சிறியர் கிரிக்கெட் வீரராக பொறுப்பேற்று பெங்களூரு அணிக்கு வெற்றி தேடித் தரும் வகையில் சிறப்பாக விளையாடியாக வேண்டும். மேலும் விராட் கோலியிடம் இது சம்பந்தமாக பேசி கொண்டிருக்கையில், புதிய கேப்டனாக ஃபேப் டு பிளேசிஸ் பதவியேற்றால் சிறப்பாக இருக்கும் என்று தன் உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

எனவே இறுதியில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஃபேப் டு பிளேசிஸ்சை புதிய கேப்டனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு நியமித்து விட்டோம் என்று விளக்கமளித்துள்ளார்.

7 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய பெங்களூர் அணி நிர்வாகம்

தென் ஆப்பிரிக்க வீரரான ஃபேப் டு பிளேசிஸ் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இதுவரை மொத்தமாக 2935 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 34.94 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 131.09 ஆகும்.

சென்னை அணிக்கு 2011 முதல் 2015ஆம் ஆண்டு மற்றும் 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரையில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என ஒரு ஆஸ்தான வீரராக இதுவரை அவர் விளையாடி வந்தார். குறிப்பாக கடந்த ஆண்டு கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து சென்னை அணி கோப்பையை வெல்ல மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

ஐபிஎல் தொடரில் மிகவும் முக்கிய வீரராக பார்க்கப்படும் அவரை பெங்களூர் அணி நிர்வாகம் 7 கோடி ரூபாய்க்கு நடந்து முடிந்த மெகா ஏலத்தில் கைப்பற்றி தங்களது அணியின் புதிய கேப்டனாகவும் தற்பொழுது அவரை அறிவித்திருக்கிறது. அவரது தலைமையிலான புதிய பெங்களூரு அணி எவ்வாறு இந்த ஆண்டு விளையாடப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.