பழைய பஞ்சாங்கமாக இருக்கும் இந்திய அணி.. முன்னாள் இங்கிலாந்து வீரர் விமர்சனம்

0
337

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 306 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 47.1வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி தொடரில் முன்னிலை பெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் வசீம் ஜாபர் நியூசிலாந்து அணி 306 ரன்கள் என்ற இலக்கை 270 போல் சுலபமாக தொட்டுவிட்டதாக கூறினார். வில்லியம்சன் தன்னுடைய கிளாசான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், டாம் லாத்தம் தான் அனைவரின் கவனத்தை பெற்று இருப்பதாக ஜாஃபர் பாராட்டினார். தொடக்க வீராக தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிவிட்டு நடுவரிசையில் களம் இறங்கி ரன் குவிப்பது எல்லாம் மிகவும் கடினமான விஷயம் என்று வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் 5 பந்துச்சாளர்களுடன் களமிறங்கி தவறு செய்து விட்டதாக ஜாஃபர் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன், இந்திய அணி பழைய காலத்தில் இருப்பதாக கூறியுள்ளார். தற்பொழுது உள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு பந்துவீச்சாளராக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தீபக் ஹூடா, அல்லது தீபக்சாகர் ஆகியோருக்கு தவான் வாய்ப்பு வழங்கவில்லை. கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும்.ஏனெனில் ஆக்லாந்து மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளரை விட சுழற் பந்துவீச்சாளர்கள் தான் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்கள். வேக பந்துவீச்சாளர்கள் ஒரு ஓவருக்கு ஐந்து புள்ளி 7 ரன்களை கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் சுழற் பந்துவீச்சாளர்கள் ஆக்லாந்து மைதானத்தில் ஓவருக்கு 4.5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் இப்படி இருக்க தீபக் ஹூடாவும் களமிறங்கி இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும். பழைய இந்திய அணியில் கம்பீரை தவிர மற்ற அனைவருமே பந்து வீசக்கூடிய திறமையை வைத்திருந்தார்கள். சச்சின், சேவாக் ,ரெய்னா, யுவராஜ் சிங் என அனைவரும் பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். ஆனால் தற்போது இந்திய அணியில் முன்வரிசை பேட்ஸ்மன்களுக்கு யாருக்கும் பந்து வீச தெரியாது.இதனால் அந்த திறமையை கற்றுக் கொள்வது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது.