இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவுக்கு டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் தவறான முடிவு எடுக்கக் கூடாது என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
மேலும் தற்போது சூரியகுமார் யாதவியின் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்திய அணி நாளை வாழ்வா சாவா போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
சூரியகுமார் பேட்டிங் மாற்றம்
தற்பொழுது சூரியகுமார் யாதவ் முன்பு போல அதிரடியாக விளையாடாமல் இருந்து வருகிறார். அவருக்கு நேராக அடிக்கும்படி பந்தை மெதுவாக வீசுவது பிரச்சினையாக இருக்கிறது. அவர் மணிக்கட்டு சக்தியை வைத்து இரு பக்கமும் விளையாடக்கூடிய வீரராக இருப்பதால் நேராக வலுவாக அடிக்க முடிவதில்லை.
இதைத் தாண்டி சூரியகுமார் உள்ளே வரும் பொழுது இந்திய அணி நெருக்கடியில் இந்த உலகக் கோப்பையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் கொஞ்சம் பொறுமையாக விளையாட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஆனால் இது குறித்து ரசிகர்கள் அவர் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.
முட்டாள்தனமாக இருக்கும்
இது குறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது “இந்த உலகக்கோப்பை தொடர் முடிவடைந்ததும் சூரியகுமார் விஷயத்தில் ஏதாவது தவறான முடிவுகளை இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்தால் அது மிகவும் முட்டாள்தனமானதாக இருக்கும் என்று நான் கூறுவேன். இந்த டி20 வடிவத்தில் அவர் மிகப்பெரிய ஜீனியஸ்”
இதையும் படிங்க : கம்பீர் இந்த வேலையா 50,000 சம்பளம் கொடுத்தாலே செய்வாங்க.. அதை செய்ய நீங்க எதுக்கு? – பத்ரிநாத் விமர்சனம்
“ஒரு அணியில் எல்லோரும் ஒரே மாதிரி விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு அணியில் பல்வேறு வகையில் விளையாடக்கூடிய வீரர்கள் இருக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் இன்னும் கொஞ்சம் அதிரடியாக விளையாடலாம் என்று நினைத்திருக்க கூடும். ஆனால் அப்படி அவர் விளையாடுவதற்கான சூழ்நிலை இல்லை. போட்டியை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொழுது கொஞ்சம் அதிரடியை குறைத்துக் கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.






