கம்பீர் இந்த வேலையா 50,000 சம்பளம் கொடுத்தாலே செய்வாங்க.. அதை செய்ய நீங்க எதுக்கு? – பத்ரிநாத் விமர்சனம்

0
10

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் வெறும் எண்களை வைத்துக்கொண்டு வீரர்களை மதிப்பிடுவதற்கு கம்பீர் பயிற்சியாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என காட்டமாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணியில் அக்சர் படேல் சேர்க்கப்படவில்லை. அந்த அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்த காரணத்தினால் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார். ஆனால் இதற்கு சுப்பிரமணியம் பத்ரிநாத் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது பயிற்சியாளர் வேலை இல்லை

எந்த ஒரு வீரர்களையும் அவர்களுடைய புள்ளிவிபரங்களை வைத்து கணக்கிட கூடாது, அவர்கள் தற்போது எப்படியான பார்மில் இருக்கிறார்கள், அவர்களால் எப்படியான வேலைகளை செய்ய முடியும் என்று ஒரு பயிற்சியாளர் கணிக்க வேண்டும் என சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணியில் ஆடுகளத்திற்கு தகுந்த வீரர்களை தேர்வு செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் முதல் முறையாக எதிரணியில் இருக்கும் வீரர்களுக்கு மேட்ச்அப் பார்த்து வீரரை தேர்வு செய்வது சரியானதாக அமையவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் வரை அக்சர் படேல் விளையாட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இதுதான் சரியானது

இது குறித்து சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறும் பொழுது “ஒரு வீரர் இத்தனை போட்டிகளில் விளையாடினார், இத்தனை போட்டிகளில் வெற்றி அடைந்தார், தோல்வி அடைந்தார் என்று பார்ப்பது சரிதான். ஆனால் இந்த எண்களை தாண்டி பார்க்க வேண்டிய உயர்ந்த நிலையில் ஒரு பயிற்சியாளர் இருக்க வேண்டும். ஒரு வீரருக்கு புள்ளி விபரங்கள் எதிராக இருந்தாலும், அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறாரா? உடல் தகுதியுடன் இருக்கிறாரா? என்பதை கண்டறியவே பயிற்சியாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க : சூர்யா கம்பீர் ஜிம்பாப்வே சேப்பாக்கத்தில் சம்பவம் பண்ணும்.. இந்த ஒரு காரணத்தால உங்களை தோற்கடிக்கலாம் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை

“எல்லாமே எங்களை வைத்து முடிவு செய்துவிடலாம் என்றால் வெறும் ஐம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு அனலைஸ்டை வைத்து இந்த வேலையை செய்து விடலாம். பயிற்சியாளர் பொறுப்பு தேவையே இல்லை. சர்வதேச மட்டத்தில் சிறப்பாக இருந்த காரணத்தினால்தான் கம்பீருக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் அதற்கு தகுந்த முறையில் வேலை செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -