ஐபிஎல் 2025

அடிச்சு சொல்றேன்.. ரிக்கி பாண்டிங் சொல்லாம பிரப்சிம்ரனின் அந்த விஷயம் நடந்திருக்காது – மைக்கேல் வாகன் பேச்சு

பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங் நேற்று லக்னோ அணிக்கு எதிராக 34 பந்துகளில் 69 ரன்கள் அதிரடியாக குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவருடைய வெற்றியில் எவ்வளவு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார் என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது பிரப்சிம்ரன் சிங் இந்திய அணியில் அறிமுகமாகாத காரணத்தினால் அன்-கேப்ட்டு வீரராக இருக்கிறார். மேலும் இவர் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதால், இவருடைய தேவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இருந்தது. எனவே இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது.

ரிக்கி பாண்டிங் சொல்லாமல் நடந்திருக்காது

சிலர் இவருடைய இடத்திற்கு அசுத்தோஸ் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் தக்க வைக்கும் என நம்பினார்கள். தற்போதும் கூட இவருடைய இடத்திற்கு அவரையே தக்க வைத்திருக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்தது. இப்படியான நிலையில்தான் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் தன்னை நம்பி தக்க வைத்ததற்கு நேற்று அருமையான முறையில் பேட்டிங் செய்து அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “கிரிக்கெட்டில் பிரப்சிம்ரன் சிங்கின் பயணத்தின் ஆரம்பம் இதுவென்று நான் நினைக்கிறேன். அவருக்கு ஐபிஎல் தொடரில் சில நல்ல இன்னிங்ஸ்கள் இருந்திருக்கிறது. அவர் ஒரு நல்ல வீரர் என்கின்ற காரணத்தினால்தான் தக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பையன் தனக்கு வேண்டும் என ரிக்கி பாண்டிங் கேட்காமல் அவரை நிச்சயம் தக்க வைத்திருக்க மாட்டார்கள்”

- Advertisement -

இந்த பையனிடம் ஏதோ இருக்கிறது

“இவரிடம் ஏதோ சிறந்த ஒன்று இருக்கிறது. அதிலிருந்துதான் நாம் நேற்று அவர் விளையாடியதை பார்த்தோம். நீங்கள் சிறந்த முறையில் விளையாடி, மேலும் உங்களுடைய அணியின் வெற்றிக்கும் காரணமாக இருக்கும் பொழுது, உங்களுடைய நம்பிக்கை கூரை வழியாக வானத்திற்கு செல்கிறது. அவரிடம் சிறந்த விஷயங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன். காரணமாக எதிர்காலத்தில் அவர் இன்னும் நல்ல முறையில் இருப்பார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் முடிந்ததும்.. அணியை மாற்றும் ஜெய்ஸ்வால்.. எந்த அணிக்கு செல்கிறார்?.. வெளியான தகவல்

” டி20 கிரிக்கெட் பொருத்தவரையில் எப்பொழுதும் முக்கியமானது பவர். நீங்கள் மைதானத்தில் பந்தை நல்ல பவராகவும் நல்ல டச்சிலும் அடித்து விளையாடும் பொழுது, உங்களுக்கு ஸ்கொயரின் பின்னால் அல்லது ஸ்கொயரின் முன்னால் எங்கு பீல்டரை வைப்பது என எதிரணியின் கேப்டன் பெரிய குழப்பத்திற்கு சென்று விடுகிறார். டி20 கிரிக்கெட்டில் பவர் மற்றும் டச் மிகவும் அவசியமானது. இந்த விஷயத்தில் பிரப்சிம்ரன் சிங் மிகவும் முக்கியமானவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts