தற்போது அனைத்து வித கிரிக்கெட் பார்மெட்டிலும் இவர் தான் தலை சிறந்த பேட்ஸ்மேன் ; ரோஹித், கோஹ்லி இல்லை – மைக்கல் வாகன் கருத்து

0
228
Rohit Sharma Michael Vaughan and Virat Kohli

நேற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து முடிந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோல்வியிலிருந்து பாபர் அசாம் தனது நிதான பேட்டிங் மூலமாக காப்பாற்றி இருக்கிறார்.425 பந்துகளை பிடித்து 21 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 196 ரன்கள் குவித்து அசத்தி இருக்கிறார்.

ஒரு டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்சில் அதிக நிமிடங்களை பிடித்து பேட்டிங் செய்த இரண்டாவது வீரர் என்கிற சாதனைக்கு பாபர் அசாம் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அதேபோல கேப்டனாக 4வது இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் பாபர் அசாம் குறித்து தன்னுடைய டுவிட்டர் வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அனைத்து கிரிக்கெட் பார்மெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம்

பாபர் அசாம் குறித்து ட்வீட் செய்துள் மைக்கேல் வாகன் “எந்தவித கேள்வியும், யோசனையும் இன்றி பாபர் அசாம் தான் தற்பொழுது உலகின் சிறந்த பேட்ஸ்மேன். டெஸ்ட் மட்டுமல்லாமல் அனைத்து வித கிரிகெட் பார்மெட்டிலும் புத்திசாலித்தனமான ஒரு கிரிக்கெட் பேட்ஸ்மேனாக அவர் எனக்குத் தெரிகிறார்” என்று பதிவு செய்துள்ளார்.

ஐசிசி ஒருநாள் மற்றும் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை புள்ளி பட்டியலில் பாபர் அசாம் முதல் இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பாபர் அசாம் 8ஆவது இடத்தில் இருக்கிறார். நேற்று நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்டில் மிக அற்புதமாக விளையாடி 196 ரன்கள் குவித்துள்ளார். எனவே அவருடைய டெஸ்ட் தரவரிசை புள்ளிகள் கூட வாய்ப்பு உள்ளது. 8வது இடத்தில் இருக்கும் அவர் இன்னும் ஒரு சில இடங்கள் முன்னேறி அதிக வாய்ப்பு உள்ளதென நாம் உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகள் சமநிலயை முடிவடைந்த நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3வது டெஸ்ட் போட்டி லாகூரில் வருகிற 21-ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. வெற்றியை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.