இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் உலகின் எந்த அணியும் ஒரே முறையில் விளையாடி வென்றது கிடையாது என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அறிவுரை கூறியிருக்கிறார். மேலும் அவர்கள் பந்துவீச்சாளர்களை அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத், லக்னோ அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் ஹைதராபாத் அணி ஒரே முறையில் தீவிரமாக விளையாடச் சென்று விக்கெட்டுகளை இழந்து ரன்கள் குவிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. மேலும் ஆடுகளும் பேட்டிங் செய்வதற்கு சாதகமாகவே ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சாளர்களை அழித்து விடுவார்கள்
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது “வெளிப்படையாகவே நாம் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பவர் மற்றும் ஹை ஸ்கோர் செய்வதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். அதே சமயத்தில் அவர்களுடைய பவுலர்கள் தன்னம்பிக்கை இழக்காமல் இருப்பதற்கான வேலையையும் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் பந்துவீச்சாளர்கள் சாலை போன்ற ஆடுகளத்தில் பந்து வீசுகிறார்கள். கம்மின்ஸ் நேற்றைய போட்டியில் நன்றாக செயல்பட்டார். ஆனால் முதல் போட்டியில் 60 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தார்”
“ஆடம் ஜாம்பாவுக்கு ஒரு கொடூரமான இரவாக அமைந்துவிட்டது. மேலும் முகமது ஷமி ஓவருக்கு 12 ரன் வீதம் கொடுத்தார். எனவே உங்களுடைய பந்துவீச்சு தாக்குதலில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் இப்படி ரோடு போன்ற ஆடுகளத்தில் பந்து வீசினால், அவர்களுடைய தன்னம்பிக்கை குறையும். பிறகு நீங்கள் திடீரென அவர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டுமென்று எதிர்பார்ப்பீர்கள் ஆனால் அது நடக்காது”
உலகில் இதற்கு சாத்தியமே இல்லை
“ஒரு பெரிய தொடரில் ஒரே மாதிரியான அணுகுமுறையை கொண்ட அணியை நான் பார்த்தது கிடையாது. ஹைதராபாத் ஒரே அணுகுமுறையில் அதிரடியாக விளையாட நினைப்பதை பார்த்து நான் கவலைப்படுகிறேன். அவர்கள் தங்களுடைய கியர்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தவரை ஆக்ரோஷமாக செல்லுங்கள் சூழ்நிலை சரியில்லை என்றால் கொஞ்சம் தாமதித்து விளையாடுங்கள்”
இதையும் படிங்க : தோனிக்கு மட்டுமே ஆதரவு தரது நல்லதில்லை.. சிஎஸ்கே வேற யாரையுமே உருவாக்கல – அம்பதி ராயுடு விமர்சனம்
“நேற்று அவர்கள் தீவிரமான ஆக்ரோஷத்துடன் விளையாடியதால் குறைந்த ஸ்கோருக்கு ஆட்டம் இழந்தார்கள். அதுவே சூழ்நிலைக்கு தகுந்தபடி கொஞ்சம் கியரை மாற்றி விளையாடு இருந்தால் அவர்கள் 220 முதல் 230 ரன்கள் எடுத்திருக்க முடியும். தேசிய அளவிலான கிரிக்கெட் அல்லது பெரிய தொடர்கள் எதிலும் ஒரே பாணியில் ஆக்ரோஷமாக விளையாடி வென்ற அணியை நான் பார்த்ததே கிடையாது” என்று கூறி இருக்கிறார்.