தோனிக்கு மட்டுமே ஆதரவு தரது நல்லதில்லை.. சிஎஸ்கே வேற யாரையுமே உருவாக்கல – அம்பதி ராயுடு விமர்சனம்

0
181
Dhoni

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தோனிக்கு மட்டுமே ஆதரவு தருவது மற்ற வீரர்களை பாதிக்கும் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர் சி பி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு தரும் ஆதரவு குறித்து அம்பதி ராயுடு இடம் கேட்ட பொழுது அவர் தைரியமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இது மிகவும் பயமாக இருக்கிறது

இது குறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது “நீங்கள் புதியவராக இருந்தால் இந்த சூழ்நிலை உங்களுக்கு மிகவும் பயமாக இருக்கும். சத்தம் மிகவும் அதிகமாகவும் ஆதரவு மிக அதிகமாகவும் இருக்கும். நீங்கள் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு விளையாடும் பொழுது அவர்கள் சிஎஸ்கே அணிக்கு ரசிகராவதற்கு முன்பாகவே தோனிக்கு ரசிகராகிவிட்டவர்கள் என்பது புரியும். அவர் சிஎஸ்கே அணிக்காக என்ன செய்தார் என ரசிகர்கள் பிரமித்து நேசிக்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்”

“சில வருடங்களாக இப்படி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு தனிநபராக பேட்டிங் செய்ய உள்ளே செல்லும் பொழுது அவர்கள் கத்துகிறார்கள். உண்மையில் நீங்கள் அவுட் ஆகும்படி கேட்கிறார்கள். அல்லது நீங்கள் ஆட்டம் இழந்து வெளியேறுவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். எனவே இது விசித்திரமானது”

- Advertisement -

இது நல்லது கிடையாது

“இப்படி ஒரு தலைப்பட்சமாக தோனிக்கு ஆதரவு கிடைப்பதும், அவருக்காக இன்னொரு வீரரை வெளியேற ரசிகர்கள் நினைப்பதும், விளையாட்டை நன்றாக விளையாடுவதற்கு உதவி செய்வது இல்லை. அணியில் உள்ள மற்ற எல்லா வீரர்களுமே அணிக்காக தங்களால் முடிந்ததை செய்யக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : சிஎஸ்கே ஸ்பின் கூட்டணி.. கோலிய ஒன்னும் செய்ய முடியாது.. இதான் காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

“இது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் வார நாட்களில் கூட சிஎஸ்கே அணிக்காக போட்டி இருக்கும்பொழுது மைதானம் நிரம்பி வழியும். தற்போது கூட்டத்தை மைதானத்திற்கு கொண்டு வருவதற்கு சிஎஸ்கே அணியில் தோனி மட்டுமே இருக்கிறார். சிஎஸ்கே மக்களை இழுத்து வருவதற்கு அணியில் அப்படி வேறு யாரையும் உருவாக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -