இந்திய கிரிக்கெட்

அஸ்வின் ஓய்வு பெற்ற உடனே.. அவர் இந்த வேலையை செய்யறது பெரிய விஷயம் – மைக்கேல் வாகன் பாராட்டு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் செயல்பட்டதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் இந்தத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் திடீரென இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ஆச்சரியப்படுத்தினார். மேலும் தொடரின் பாதியிலேயே வெளியேறி நாடு திரும்பினார்.

ரவிச்சந்திரன் அஸ்வினின் தொடர் செயல்பாடுகள்

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சில தினங்களிலேயே மீண்டும் சோசியல் மீடியாக்களில் வழக்கம் போல் வர ஆரம்பித்து விட்டார். தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலுக்கு அவர் தன்னுடைய ஓய்வு குறித்து தனிப்பட்ட விளக்கத்தை கொடுக்கும் வகையில் பேட்டி அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் உடனடியாக சோசியல் மீடியாக்களில் பழையபடி இந்தியா மற்றும் உலக நாடுகளின் கிரிக்கெட் என செயல்பட ஆரம்பித்து விட்டார். ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக கிரிக்கெட்டில் ஈடுபடுவதை பார்ப்பது அபூர்வமானது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனடியாக சோசியல் மீடியாக்கள் மூலம் கிரிக்கெட்டுக்கு திரும்பி விட்டார்.

- Advertisement -

அஸ்வின் வெளியேறியும் பங்களிப்பு செய்தார்

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும் பொழுது “ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற உடனே சோசியல் மீடியாக்களில் தன்னுடைய வலிமையான இருப்பை உறுதி செய்து கொண்டே வருகிறார். பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் முடிவடைந்ததும் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற விரும்புகிறார்கள். ஆனால் அவர் ஓய்வு பெற்ற உடனே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு சமூக வலைதளங்கள் மூலம் பங்களிப்பு செய்தார்”

இதையும் படிங்க : இனி செலக்சன் இப்படி மட்டும்தான் செய்யணும்.. தர்மத்துக்கு அதை செய்யாதீங்க – சுனில் கவாஸ்கர் யோசனை

“அஸ்வின் கிரிக்கெட்டோடு இருப்பது ஆச்சரியமான ஒன்று. அடுத்து இந்த தொடரில் ஒருவரை நான் பேச வேண்டும் என்றால் அது ஆகாஷ் தீப். அவருக்கு இந்த தொடரில் பெரிய அளவு அதிர்ஷ்டம் இல்லை. ஆனால் மிகச் சிறப்பான முறையில் அவர் பந்து வீசினார். எனவே நான் அவருக்கு இந்த தொடரில் 10 க்கு 7 மதிப்பெண்கள் கொடுப்பேன்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts