இனி செலக்சன் இப்படி மட்டும்தான் செய்யணும்.. தர்மத்துக்கு அதை செய்யாதீங்க – சுனில் கவாஸ்கர் யோசனை

0
37
Gavaskar

இந்திய தேர்வாளர்கள் அடுத்து இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்திய லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் சில முக்கிய யோசனைகளை தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டு அதற்கு அடுத்து இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் முதல் தொடராக இந்திய அணிக்கு இது அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உடனடியாக தொப்பியை கொடுக்காதீர்கள்

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்கு செல்லும் பொழுது பதினாறுக்கும் மேற்பட்ட வீரர்களை இந்திய அணியில் இணைத்து ஏற்றி செல்லாதீர்கள். அவர்களுக்கு நீங்கள் உடனடியாக அங்கு இந்திய தொப்பியை கொடுக்காதீர்கள். வெளிநாட்டில் பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் பற்றாக்குறைதான் இருக்கும். எனவே அணியில் பயிற்சிக்காக கூடுதல் பயிற்சி வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு இந்திய ஆடையை கொடுங்கள் ஆனால் தொப்பியை தராதீர்கள்”

“மேலும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு இடையில் சில ஓய்வு நாட்கள் இருக்கும். இந்த ஓய்வு நாட்களை நீங்கள் பயிற்சி போட்டிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டெஸ்ட் மேட்ச் முடிந்து அடுத்த டெஸ்ட் மேட்ச்சில் விளையாட இந்திய அணி பயணம் மேற்கொள்ளும் இது ஓய்வு நாளில் வராது. எனவே இந்த நாளில் இந்திய அணிக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கு அடுத்த நாட்களை நீங்கள் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஓய்வை வீரர்கள் முடிவு செய்யக்கூடாது

இது குறித்து மேலும் பேசி இருந்த சுனில் கவாஸ்கர் மிக முக்கியமான விஷயமாக தனிப்பட்ட வீரர்கள் தங்களுடைய ஓய்வு நாட்களை தீர்மானிப்பது தடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்திய அணிக்கான பயிற்சி எப்பொழுது யார் யாருக்கு? என்பதை அணி நிர்வாக முடிவு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : பிசிசிஐ அதிரடி நடவடிக்கை.. கம்பீர் மேனேஜர் மீது பாய்ந்தது.. இனி வீரர்களுக்கும் வருகிறது தடை

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “தனிப்பட்ட வீரர்கள் தங்களுடைய விருப்பப்படி பயிற்சி செய்யும் சமீபத்திய பாரம்பரியத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். பயிற்சியில் இருந்து எந்த வீரனுக்கு ஓய்வு என்பதை பயிற்சியாளர் மற்றும் கேப்டன் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். மேலும் இதை ஒரு தனிப்பட்ட வீரர் முடிவு செய்யும் சூழ்நிலை இனி இருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -