நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் இடத்தில் தோனி இருந்திருந்தால் நடக்கக்கூடிய விஷயமே வேறாக இருந்திருக்கும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று டெல்லி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும், கேப்டனாகவும் ரிஷப்ண்ட் செய்த தவறுகள் டெல்லி அணியை வெல்ல வைத்து விட்டது. வெல்ல வேண்டிய போட்டியை லக்னோ அணி தோற்றுவிட்டது.
தற்போது 43 வயதாகும் மகேந்திர சிங் தோனி ஸ்டெம்புகளுக்கு பின்னால் விக்கெட் கீப்பராக இன்னும் அதே பழைய வேகத்துடன் அசத்துகிறார். சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நூர் அகமத் பந்துவீச்சில் சூரிய குமாரை மின்னல் வேகத்தில் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார்.
மகேந்திர சிங் தோனி தந்த இந்த திருப்புமுனையில் இருந்து நூர் அகமத் கையில் சிக்கிய மும்பை அணி சுருண்டது. ஒருவேளை அந்த இடத்தில் தோனி ஸ்டெம்பிங் வாய்ப்பை விட்டிருந்தால், அது ஆட்டத்தை எந்த முறையில் வேண்டுமானாலும் மாற்றி இருக்கலாம். ஏனென்றால் அது சூரியகுமார் விக்கெட். மேலும் போட்டியில் இறுதி ஓவர் வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஒன்பது விக்கெட்டுகளை டெல்லி இழந்து இருக்க கடைசி ஓவரில் ஆறு ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது ரிஷப் பண்ட் சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வந்தார். இந்த நிலையில் மோகித் சர்மாவை முதல் பந்திலேயே ஸ்டெம்பிங் செய்ய வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. அதை ரிஷப் பண்ட் தவறவிட லக்னோ அணி பரிதாபமாக வெல்ல வேண்டிய போட்டியை தோற்றது.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் இந்த ஒரு விஷயத்தை கத்துக்கணும்.. இல்லனா ரொம்ப கஷ்டம் – அம்பதி ராயுடு பேட்டி
இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “கடைசி ஓவரில் சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வருவது என்ற ரிஷப் பண்ட் செய்த சூதாட்டம் பலன் அளிக்கவே செய்தது. அவர் மட்டும் அந்தப் பந்தை பிடித்திருந்தால், அந்த இடத்தில் தோனி இருந்திருந்தால் ஃப்ளாஷ் போல பெயில்கள் பறந்து இருக்கும். ரிஷப் பண்ட் சூதாட்டம் போல செய்த ஒரு முடிவால் ஒரு வாய்ப்பையும் உருவாக்கினார். எனவே அவர் எடுத்த இந்த முடிவை நான் குறை சொல்ல மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.