ரிஷப் பண்ட் இந்த ஒரு விஷயத்தை கத்துக்கணும்.. இல்லனா ரொம்ப கஷ்டம் – அம்பதி ராயுடு பேட்டி

0
110
Ambati

நேற்று லக்னோ அணி டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருக்கிறார். இதைத்தொடர்ந்து அவர் என்ன செய்ய வேண்டும் என அம்பதி ராயுடு அறிவுரை கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய டெல்லி அணியின் பந்துவீச்சை லக்னோ அடித்து நொறுக்கியது. இருந்த போதும் முக்கியமான கட்டத்தில் ரிஷப் பண்ட் தன் விக்கெட்டை கொடுத்த காரணத்தினால், 240 ரன்கள் எடுக்க வேண்டிய லக்னோ 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் செய்த தவறுகள்

ஒரு பக்கத்தில் நிக்கோலோஸ் பூரன் மிகவும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ரிஷப் பண்ட் வழக்கம்போல தவறான ஷாட் செலெக்ஷன் செய்து ஆட்டம் இழந்தார். இங்கிருந்து லக்னோ அணி சரிவுக்கு உள்ளாகியது. இதைத்தொடர்ந்து அந்த அணி 250 ரன்கள் என்கின்ற இடத்தில் இருந்து இறங்கி வந்து 209 ரன்கள் என்று முடித்தது.

இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பராகவும் கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் வாய்ப்புகளை தவறவிட்டார். இத்துடன் கேப்டனாக சீனியர் பவுலர்களை கடைசி கட்டத்தில் பயன்படுத்தாமல் அறிமுக பவுலர்களை பயன்படுத்தி வெகு எளிதாக ரன்களை விட்டுத் தந்தார். இதன் காரணமாக டெல்லி அணி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை அருமையாக எடுத்துச் சென்று விட்டது.

- Advertisement -

அம்பதி ராயுடு தந்த அறிவுரை

இது குறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “நாம் ரிஷப் பண்ட் ஷாட் செலக்சன் பற்றி பேசுகிறோம். அவர் கேப் கண்டுபிடித்து விளையாடவோ அல்லது பௌண்டரி அடிக்கவோ நினைக்காமல் நேராக சிக்சர் அடிக்க நினைக்கிறார். எனவே அவருடைய பேட்ஸ்மேன்ஷிப் தரம் மேம்பட வேண்டும். நீங்கள் மிடில் ஓவர்களில் விளையாட விரும்பினால் உங்களுடைய ஷாட் செலக்சன் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நிலைமை கடினம் ஆகிவிடும்”

இதையும் படிங்க : தோனி என்ன விசாரித்தார்.. அவர் சொன்ன அறிவுரை என்ன? – வெளியான அட்டகாசமான தகவல்கள்

“நேற்று லக்னோ அணிக்கு சரிவு ரிஷப் பண்ட் ஆட்டம் இழந்ததிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இதைத்தொடர்ந்து வரக்கூடியவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் கிடையாது. மெதுவான பந்துவீச்சுக்கு அவர்கள் தடுமாற்றம் அடையக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே எல்லாம் அங்கிருந்து தான் ஆரம்பித்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -