எங்க ஸ்டோக்ஸ் பும்ராவுக்கு எதிரா இதை செய்யணும்.. அது ஆஸிக்கும் பிரச்சனையா மாறும் – மைக்கேல் வாகன் பேட்டி

0
294
Vaughan

இங்கிலாந்து அணிக்கு அடுத்து வருகின்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் ஒரு முக்கிய வேலையை செய்ய வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு அடுத்து இரண்டு பெரிய டெஸ்ட் தொடர்களாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதும், சொந்த மண்ணில் இந்தியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதும் இருக்கிறது. இந்த இரண்டு தொடர்களையும் எதிர்கொள்ள மைக்கேல் வாகன் ஒரு முக்கிய யோசனையை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம்

தற்போது கேப்டன் வென் ஸ்டோக்ஸ் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார். சில நேரங்களில் இறுதிக்கட்ட பேட்ஸ்மேன்களுடன் விளையாடும் தேவை வரும் பொழுது, அவர்கள் விக்கெட்டை இழப்பதால் இவர் அதிரடியாக விளையாட சென்று விக்கெட்டை இழக்கிறார்.

இதன் காரணமாக ஒரு சிறந்த பேட்ஸ்மேன் இங்கிலாந்து அணி அழுத்தத்தின் காரணமாக இழக்க வேண்டியது வருகிறது. தற்பொழுது இதற்கு பும்ராவை வைத்து மைக்கேல் வாகன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்க்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறி இருக்கிறார்.

- Advertisement -

பும்ராவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் இதை செய்யணும்

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது ” வரும் ஆண்டுகளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு இந்த சிம்பிள் ஸ்வாப் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் என்பது நேரலையில் இங்கிலாந்து அணிக்கு முதல் மூன்று இடங்களில் மற்றொரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதை உணர்ந்தேன்”

“பும்ரா புத்தம் புதிய பந்தில் வலதுகை வீரர்களான மெக்ஸ்வீனி, லபுசேன் மற்றும் ஸ்மித் ஆகியோருக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். இந்த இடத்தில் இடதுகை வீரர்கள்தான் முப்புராவை எதிர்கொள்வதற்கு மிகவும் சரியானவர்களாக இருப்பார்கள்”

இதையும் படிங்க : பும்ரா பத்தி என் பேரக் குழந்தைகளிடம் இதை சொல்வேன்.. நிச்சயம் டெஸ்ட் தொடரை ஜெயிப்போம் – டிராவிஸ் ஹெட் பேட்டி

“எனவே கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும். இதனால் பும்ராவை சமாளிக்க எளிதாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் இதையே செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது ஸ்டோக்ஸ்காக ஆஸ்திரேலியா சீக்கிரத்தில் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனை கொண்டு வரவும் செய்யலாம். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை நாம் தவிர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -