இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அணி வெல்லும் என அந்த அணி வீரர் டிராவிஸ் ஹெட் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் துவங்குகிறது.
அச்சுறுத்தலாக மாறிய பும்ரா
வேகப்பந்து வீச்சுக்கு கொஞ்சம் சாதகம் இருக்கும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பும்ராவை எதிர் கொள்வது மிகவும் சிரமமான காரியமாக இருக்கிறது. இதனால் அவருக்கென தனியாக திட்டங்கள் தீட்ட வேண்டிய நிலைக்கு ஆஸ்திரேலியா அணி தள்ளப்பட்டு இருக்கிறது. மற்ற பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியா அணி மறந்துவிட்டது என்றும் சொல்லலாம்.
இது குறித்து பேசி இருக்கும் ஹெட் கூறும் பொழுது “பும்ரா தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் மிகச் சிறந்தவர். அவர் எவ்வளவு சவாலாக இருக்க முடியும் என்பதை நாங்கள் கண்டறிந்து கொண்டு வருகிறோம். அவருக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து உங்கள் பெயரை குழந்தையிடம் நான் பும்ராவை எதிர்த்து விளையாடி இருக்கிறேன் என்று சொல்லலாம். நான் அவருக்கு எதிராக இன்னும் சில முறை விளையாடுவேன் என்று நினைக்கிறேன்”
நிறைய முறை செய்திருக்கிறோம்
“கடந்த ஆண்டுகளில் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த பிறகு, அதிலிருந்து மீண்டு வந்து சிறப்பாக விளையாடி தொடரை வென்ற அணிகள் ஏராளம் இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் நாங்கள் சில சவாலான டெஸ்ட் போட்டிகள் மற்றும் டெஸ்ட் தொடர்களை எதிர்கொண்டு விளையாடியிருக்கிறோம்”
இதையும் படிங்க : பிசிசிஐ என்ன வேணா செய்யட்டும்.. ஆனா பாகிஸ்தான் அவங்களுக்கு இத செய்யுங்க – அக்தர் கோரிக்கை
“எங்களுக்கு ஒரு வாரம் சரியில்லாமல் போய்விட்டது, அது பரவாயில்லை. எங்களுக்கு இன்னும் வாய்ப்புகள் கையில் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நாங்கள் செய்து வந்தது போல செய்து இதிலிருந்து வெளியில் வருவோம். இந்த டீம் எதையும் சமாளித்து கடந்த சில வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.