இங்கிலாந்து கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து சோகமாக இந்த தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணி குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும் பந்துவீச்சு மோசமாக இருந்த காரணத்தால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இடம் தோல்வியடைந்தது. அதற்கு பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 325 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இதற்குப் பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 8 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை விட்டு சோகமாக வெளியேறிகிறது.
இந்த தொடரில் முக்கியமாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மோசமாக இருப்பதை தெள்ளத் தெளிவாக காட்டியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தொடர்ந்து இந்த தொடரில் தோல்வி அடைந்து வெளியே இருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் குறை குறித்து மைக்கேல் வாகன் சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் வேகம்தான் முக்கியம் என்று முடிவு செய்த அந்த நபர் யார் என்று எனக்கு தெரியவில்லை. உலகம் எங்கும் உள்ள பெரும்பாலான பேட்ஸ்மேன்களிடம் கேட்டால் 90 மைல் வேகத்தில் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆனால் 90 மைல் வேகத்தில் வீசப்படும் பந்துகளை எதிர்கொள்ள விரும்பும் இடம் இருந்தால், அது துணை கண்டமாக தான் இருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி இந்தியா மற்றும் மற்ற அணிகளை வேகத்தில் தாக்கியுள்ளது.
இதையும் படிங்க:நியூசி அணியில அந்த 5 பேர் இருக்காங்க.. அதனால ரோஹித் இத தாராளமா ட்ரை பண்ணலாம் – முகமது கைப் ஐடியா
பேட்ஸ்மேன்கள் எல்லா பந்துகளையும் எல்லா பகுதிகளுக்கு திருப்பி விடுகிறார்கள். நான் கிரிக்கெட் பார்த்து, விளையாடி இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஈடுபட்டு வந்த காலத்தில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் எங்கள் சிறந்த இரண்டு பந்து வீச்சாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் 90 மைல் வேகத்துக்கு மேல் பந்து வீசுவதில்லை. இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை, இடது கை சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லை. மேலும் இடது கை பேட்ஸ்மேன்களும் இல்லை, வேகத்தை பொருத்தவரை எங்கள் அணி ஆல் அவுட் ஆக இருப்பதாக தெரிகிறது” என்று கூறி இருக்கிறார்.