இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசியில் போட்டி வருகிற மார்ச் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய பிளேயிங் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாயில் விளையாடி வரும் நிலையில், முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராகவும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்திய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டி வருகிற மார்ச் இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக சம வலிமை கொண்ட அணியாக நியூசிலாந்து இருப்பதால் லீக் சுற்றில் முதலிடத்தில் முடிக்க இந்த இரண்டு அணிகளும் போட்டி போடும்.
இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளுக்கு அக்சார், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சுழற்பந்து வீச்சு விருப்பங்களாக இந்திய அணி தேர்வு செய்துள்ளனர். மேலும் ஹர்டிக் பாண்டியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை கொண்டு இந்திய அணி வாஷிங்டன் சுந்தரை விளையாட வைக்க வேண்டும் என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.
மோசமான ஐடியா இல்லை
இதுகுறித்து கைப் கூறும் போது “கான்வே, ரச்சின், லாதம், பிரேஸ்வெல், சாண்ட்னர் போன்ற இடது கை ஆட்டக்காரர்கள் நியூசிலாந்து அணியில் அதிகம் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தரை விளையாட வைப்பது மோசமான ஐடியாவாக இருக்காது என்று தோன்றுகிறது. அவர்கள் நமது இறுதி எதிராயாக இருக்கலாம். எனவே வாசிங்டன் சுந்தருக்கு எதிராக அவர்களை சோதிப்பது மதிப்பிற்குரிய விஷயமாகும்” என்று கைப் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய வீரர் நானே சொல்றேன்.. பிசிசிஐ இப்படி செஞ்சிருக்க கூடாது.. அட்டவணையை இப்படி மாற்றி இருக்கணும் – வாசிம் ஜாபர்
நியூசிலாந்து அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னரை விளையாட வைப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்று முகமது கைப் பேசி இருக்கிறார். நியூசிலாந்து அணியும் இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதோடு, வங்கதேச அணிக்கு எதிராகவும் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.






