இன்று டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியில் டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்விக்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன குற்றம் சாட்டி இருக்கிறார்.
தற்பொழுது டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்திய அணி விளையாடும் போட்டிகள், இந்திய ரசிகர்கள் பார்ப்பதற்காக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அதே சமயத்தில் அங்கு காலை 10:30 மணி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் பட்சத்தில் கயானா மைதானத்தில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. காரணம் 27ஆம் தேதி காலை இந்திய அணி அங்கு விளையாடுகிறது. ஆனால் இன்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் விளையாட வேண்டும் என்றால் 26 ஆம் தேதி இரவில் விளையாட வேண்டும்.
எனவே ஐசிசிக்கு டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்திய அணிக்கு போட்டிகளை அங்கு பகலிலும் இங்கு இரவிலும் வரும்படி நடத்தினால்தான் சரியாக இருக்கும். எனவே ஐசிசி இப்படி இந்திய அணி போட்டிகளை மட்டும் அங்கு பகலில் காலையில் நடத்தி வருகிறது.
தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் மைக்கேல் வாகன் “கண்டிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொண்ட போட்டி கயானா மைதானத்தில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒட்டு மொத்த டி20 உலக கோப்பை தொடரும் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
இதையும் படிங்க : நல்லவேளை அது எனக்கு நடக்கல.. நானும் தப்புதான் செஞ்சிருப்பேன்.. பைனல் வந்தது மகிழ்ச்சி – எய்டன் மார்க்ரம் பேட்டி
திங்கட்கிழமை இரவு செயின் வின்சென்டில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுகிறது. பின்பு அரையிறுதியில் விளையாட செவ்வாய்க்கிழமை டிரினிடாட் செல்ல நான்கு மணி நேரம் விமானம் தாமதமாகிறது.இதனால் அவர்களுக்கு பயிற்சி செய்யவும் புதிய மைதானத்தில் பழகவோ நேரமே இல்லை. வீரர்களுக்கு மரியாதை இல்லாததால் நான் பயப்படுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.