இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து பேட்டிங்கில் கொஞ்சம் தடுமாறி வருகிறார். தற்பொழுது அவருக்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஒரு குறிப்பிட்ட முக்கியமான அறிவுரையை கூறியிருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. முதல் விக்கெட்டாக சஞ்சு சாம்சன் வெளியேறியதும் உள்ளே வந்த சூரியகுமார் யாதவ் சிறப்பான முறையில் சிக்ஸர் பவுண்டரி என ஆரம்பித்தார். ஆனாலும் நேற்று திடீரென ஒரு பந்தை அடித்து ஆட சென்று ஆட்டம் இழந்தார்.
இந்திய அணியின் அணுகுமுறை
தற்போது இந்திய அணி கண்டிஷனை பொறுத்து விளையாடுவதை விட்டு ஆக்ரோஷமாக விளையாடுவதை பொதுவாக வழக்கமாக வைத்திருக்கிறது. குறிப்பாக பவர் பிளேவில் களம் இறங்கும் எல்லா வீரர்களும் அதிரடியாக ஆடுவதை மட்டுமே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்திய அணி பவர் பிளேவில் மூன்று விக்கெட் இழந்தாலும் கூட அடுத்து வரக்கூடியவர் அடுத்து விளையாடுகிறார்.
நேற்று சூரியகுமார் யாதவ் தேவையான ரன்கள் பவர் பிளேவில் இருந்த பொழுதும் கூட, இதே அதிரடி அணுகுமுறையில் சென்று மார்க் வுட் பந்தை பின்புறமாக அடிப்பதற்கு முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். எனவே சூரியகுமார் யாதவ் மட்டும் இல்லாமல் இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறையில் கொஞ்சம் மாற்றம் தேவை என பேச்சுகள் என ஆரம்பித்திருக்கிறது.
சூரியகுமார் இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது “ஒரு சில நேரங்களில் சூரியகுமார் யாதவ் மிகவும் மென்மையான முறையில் ஆட்டம் இழந்து விடுகிறார். நீங்கள் எப்போது ஆக்ரோஷமாக இருக்கும் வேண்டும் என்பதை சரியான நேரத்தில் தீர்மானிக்க வேண்டும். மேலும் அதற்கு சரியான பந்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த சகாப்தத்தில் ஒவ்வொரு பந்தையும் உங்களால் பவுண்டரிக்கு அடிக்க முடியாது. நீங்கள் அதற்கான திறமையைப் பெற்று இருப்பதாக கருதினாலும் கூட, எல்லா பந்தையும் அடிப்பது சாத்தியமில்லாதது”
இதையும் படிங்க: ஜுரல் விஷயத்தை விடுங்க.. ஹர்திக் பேட்டிங் தான் தோல்விக்கு காரணம்.. இத பாருங்க – பார்த்திவ் படேல் பேச்சு
“இந்த போட்டியில் இந்திய அணி தோற்று இருந்தாலும் கூட நிச்சயம் அவர்கள் திரும்பி வருவார்கள். அவர்கள் தொடர்ந்து மோசமான முறையில் விளையாட மாட்டார்கள். இருந்தபோதிலும் சூரியகுமார் சில மாற்றங்களை செய்தாக வேண்டும். அவர் உள்ளே வந்து 15 பந்துகள் விளையாட வேண்டும். மேலும் மைதானத்தின் பவுண்டரி அளவுகளை பார்த்து, காற்று அடிக்கும் திசையில் பந்தை அடித்து விளையாட வேண்டும். இதை அவரால் நிச்சயம் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.






