நேற்று நடந்த முடிந்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் செய்த ஒரு தவறு இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணியை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் வலிமையான முன்னிலை வகித்தது. இந்த நிலையில் நேற்று குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் பலவீனம்
தற்போது இந்திய டி20 அணியின் பேட்டிங் வரிசை எட்டாவது இடம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் களம் இறங்கும் அனைத்து பேட்ஸ்மேன்களும் கண்டிஷனைப் பற்றி கவலைப்படாமல் அடித்து விளையாடுவதை நோக்கமாக வைத்திருக்கிறார்கள். கம்பீர் இப்படியான அணுகுமுறையை இந்திய டி20 அணியில் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த நிலையில் கண்டிஷனை பற்றிய கவலைப்படாமல் விளையாடுவது பிரச்சினையை உருவாக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கம்பீரின் அணுகுமுறை குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருந்த பொழுது தைரியமான அணுகுமுறை எல்லாம் இருக்கலாம் ஆனால் கிரிக்கெட்டில் கண்டிஷன்தான் ராஜா என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்கு இதுவே காரணம்
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் பற்றி பேசிய பார்த்திவ் படேல் கூறும்பொழுது “நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது பவுன்ஸ் மற்றும் வேகம் எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து செட்டில் ஆக வேண்டும். ஆனால் 20, 25 பந்துகள் விளையாடியும் இதை செய்யவில்லை என்றால் சரி வராது. நீங்கள் அதற்கு அடுத்து அதிரடியாக செல்ல முடியாவிட்டால் அது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது. ஹர்திக் பாண்டியா பெரிய ஷார்ட் விளையாட விரும்பாவிட்டாலும் சிங்கிள் ரொட்டேட் செய்யாதது பெரிய பிரச்சனையாக மாறியது”
இதையும் படிங்க : கம்பீர் சூரியகுமார் இந்த தப்ப செய்யாதிங்க.. கிரிக்கெட்ல யாரும் செய்ய மாட்டாங்க – கெவின் பீட்டர்சன் விமர்சனம்
“ஹர்திக் பாண்டியா 35 பந்துகளில் 40 ரன்கள் எடுத்ததை நீங்கள் பார்க்கலாம். அவரது இன்னிங்ஸில் பல பாயிண்டுகள் இருக்கின்றன. அவர் விளையாடிய விதம் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. தாராளமாக உங்களுக்கு நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் சிங்கிள் ரொட்டேட் செய்தே ஆக வேண்டும். நேற்று ஹர்திக் பாண்டியா இதை செய்ய தவறினார்” என்று கூறி இருக்கிறார்.






