இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி நான்காவது நாளில் இந்திய இளம் வீர ஜெய்வாலிடம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா நடந்து கொண்ட விதம் சரியானது இல்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸி விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 91 ரன்னுக்கு ஆறு முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இடத்தில் இருந்து 228 ரன்கள் 9 விக்கெட் இழப்புக்கு எடுத்து தற்போது வலிமையான நிலைக்கு சென்று இந்திய அணிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது.
இன்றைய போட்டியில் லபுசேன் மற்றும் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணிக்கு ரன்கள் எடுத்தவர்களில் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஜெய்ஸ்வால் கேட்ச் தவறவிட்டது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் துவக்க வீரர் உஸ்மான் கவஜாவுக்கும் அவர் கேட்ச் வாய்பை தவறவிட்டது பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
இந்த நிலையில் தற்பொழுது ஆஸ்திரேலியா அணி 333 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. இந்த மைதானத்தில் அதிகபட்ச சேஸ் 1924 ஆம் வருடம் 332 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு 250 ரன்கள் தாண்டி கூட இங்கு ரன் சேஸ் செய்யப்படவில்லை. எனவே இந்திய அணி இந்த ரன்னை துரத்தி வென்றால் அது சாதனையாக இந்த மைதானத்தில் அமையும்.
இதுகுறித்து மைக் ஹஸி கூறும் பொழுது “நான் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உண்மையில் அந்த இளம் வீரர் ஜெய்ஸ்வாலிடம் கேப்டன் ரோஹித் சர்மா நடந்து கொண்ட விதம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. விக்கெட் சீக்கிரத்தில் எடுக்க வேண்டும் அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என ரோகித் சர்மா விரும்புவதை நான் வரவேற்கிறேன்”
இதையும் படிங்க : மெல்போர்ன் மைதானத்தில் அதிகபட்ச ரன் சேஸ் எவ்வளவு.. 96 வருட சாதனையை இந்தியா உடைக்குமா?.. 4வது டெஸ்ட்
“லபுசேன் போன்ற ஒரு வீரருக்கு கேட்ச்சை தவறவிட்ட பொழுது அவர் உண்மையில் வருத்தத்தில் இருந்திருப்பார். அந்த நேரத்தில் அவருக்கு நீங்கள் ஒரு அமைதியான செய்தியைத்தான் கொடுக்க வேண்டும். மாறாக அவரிடம் கடுமையாக நடந்து கொள்வது மேலும் அவரை பாதிப்படையவே வைக்கும்” என்று கூறி இருக்கிறார்.