இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் யார் அதிக ரன்கள் எடுப்பார்கள் அதிக விக்கெட் கைப்பற்றுவார்கள்? என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா அணியின் சாதனை
ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாடி உள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஒரு முறை கூட தோற்றது கிடையாது. இந்த காரணத்தினால் ஆஸ்திரேலிய அணி மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்து வருகிறது. எனவே முதல் டெஸ்ட் தோல்விக்கு இந்திய அணிக்கு பதிலடி தர முடியும் என்று நம்புகிறது.
அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயத்தால் விலகி இருப்பது ஒரு பின்னடைவாக அமைந்திருக்கிறது. மேலும் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் லபுசேன் இருவரும் ஒரே நேரத்தில் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் இருப்பது அந்த அணிக்கு எல்லாவற்றையும் விட பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. ஆனால் இதை கடந்து வெல்ல முடியும் என அந்த அணி வீரர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
விராட் கோலி பயமுறுத்துகிறார்
இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசி இருக்கும் மைக்கேல் கிளார்க் கூறும்பொழுது “இந்திய மணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது பரவாயில்லை. ஆனால் விராட் கோலி சதம் அடித்ததுதான் என்னை மிகவும் பயமுறுத்துகிறது. இரண்டாவது டெஸ்டில் அவர் இந்திய அணிக்கு அதிக ரன்கள் எடுப்பார். மேலும் இந்திய பந்துவீச்சில் பும்ராவைத் தாண்டி யாரையும் சொல்ல முடியாது. அவர் மிகவும் திறமையானவர்”
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் தொடரில் இதை பேச விரும்பவே இல்ல.. ப்ளீஸ் அதை மட்டும் கேட்காதிங்க – டிராவிஸ் ஹெட் பேட்டி
“மார்னஸ் லபுசேன் சதம் அடிப்பார். ஆனால் நான் ஸ்மித் இடம் செல்ல போகிறேன். இரண்டாவது டெஸ்டில் அவரிடமிருந்து அதிக ரன்கள் வரப்போகிறது. மேலும் அடிலெய்டில் பந்து சீம் ஆவதை விட அதிகம் ஸ்விங் ஆகும் என்று நினைக்கிறேன். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக விக்கெட் கைப்பற்றி இருக்கும் ஸ்டார்க்கை தேர்வு செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






