இந்திய டெஸ்ட் தொடரில் இதை பேச விரும்பவே இல்ல.. ப்ளீஸ் அதை மட்டும் கேட்காதிங்க – டிராவிஸ் ஹெட் பேட்டி

0
64
Head

தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி தான் பேச விரும்பவில்லை என ஆஸ்திரேலியா அணியின் வீரர் டிராவிஸ் ஹெட் கூறியிருக்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக ஏமாற்றி இருந்த நிலையில் ஹெட் தாக்குப் பிடித்த இரண்டாவது இன்னிங்ஸில் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி நம்பிக்கை அளித்தார். ஆனால் அவர்கள் மாற்றி பயன்படுத்தும் துவக்க ஜோடி நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

- Advertisement -

கருத்தை வாபஸ் பெற்ற ஹெட்

இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு முன்பாக தான் தொடக்க இடத்தில் விளையாடுவது குறித்து ஹெட் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அப்படியான எந்த கருத்தையும் தான் துவக்க வீரராக வருவது குறித்து வெளியிட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அணியில் பலர் அந்த இடத்திற்கு போட்டியிட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் தான் அது பற்றி கருத்து கூறுவது ஏதாவது அவசியமற்றதை உருவாக்கி விடும் எனவும், மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் அதை வேறு விதமாக எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் விளக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய பதில் இதுதான்

இது குறித்து டிராவிஸ் ஹெட் கூறும் பொழுது “தற்போது அணியில் தொடக்க இடம் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அது தேவையற்றதை உருவாக்குகிறது என்று கருதுகிறேன். நான் முதல் முறையாக மார்க்கஸ் ஹாரிஸ் துவக்க வீரராக வருவது குறித்து நான் ஆதரித்து பேசிய போது நடந்தது. இப்பொழுது நான் துவக்க வீரராக வந்து விளையாடுகிறேன் என்று கூறினால் அது தேவையற்ற தலைப்பு செய்தியாக மாறிவிடும்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் கூட ஆடறது இப்படி ஆனதுதான்.. ஆனா ஒன்னு நான் சொல்ல மாட்டேன் ரோகித் சொல்வார் – கேஎல் ராகுல்

“நான் துவக்க வீரராக வர விரும்பவில்லை என்று சொன்னால் யாருக்காவது ஆதரவாக இருக்கிறேன் என்று மாறும். ஆரம்பத்தில் துவக்க வீரராக வர விரும்பவில்லை என்கின்ற நிலை இருந்தது. எனவே நான் அதை நேர்மையாக மீடியாக்களிடம் தெரிவித்தேன். ஆனால் நான் பதில் அளித்த விதத்தில் மக்கள் அதை வேறு விதமாக புரிந்து கொண்டார்கள். ஆகவே நான் இதை பேச மாட்டேன். மேலும் தற்போது நான் விளையாடும் இடத்தில் அணி கேட்டுக்கொண்டபடி ரசித்து விளையாடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -