ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விராட் கோலிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் அவர் சச்சின் போல விளையாட தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்.
2024-25 பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மிகவும் மோசமான பேட்டிங் அணுகுமுறையை மேற்கொண்டு தொடர்ந்து ஒரே மாதிரி ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக திடீரென அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை ஓய்வு பற்றியும் பேச்சுக்கள் ஆரம்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மைக்கேல் கிளார்க் விராட் கோலிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தற்போது பேட்டிங் ஃபார்ம் சரியில்லாமல் இருந்தாலும் கூட, அவரால் நாளை ஒருநாள் இரட்டை சதம் அடிக்க முடியும் எனவும், அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் அது இந்திய அணிக்கு தான் நஷ்டமாக முடியும் எனவும் மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூடும் பொழுது “விராட் கோலியால் நாளை ஒருநாள் இரட்டை சதம் அடிக்க முடியும். அவர் அவ்வளவு சிறந்த ஒரு வீரர். அவர் எவ்வளவு தூரம் விளையாட விரும்புகிறாரோ அவ்வளவு தூரம் அவர் விளையாட வேண்டும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால் அது ஒரே ஒரு அணிக்குத்தான் தோல்வியாக முடியும் அந்த அணி இந்திய அணி!”
மேலும் பேசிய மைக்கல் கிளார்க் “விராட் கோலி விளையாடும் எந்த அணிக்கு நான் கேப்டனாக இருந்தாலும், அவர் ரன்கள் எடுக்கவில்லை என்று எனக்குத் தெரிந்தாலும், அவர் என் அணியில் விளையாட வேண்டும் என்று நான் விரும்பி இருப்பேன். அப்படி அவர் என் அணியில் இருப்பதற்காக நான் போராடி இருப்பேன்”
கம்பீர் இதையும் படிங்க : கம்பீர் ஒரு நயவஞ்சகர்.. அவரே கிரெடிட் எடுத்துக்க கூடிய ஆள்தான் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு
“விராட் கோலிக்கு சச்சின் வேறு மாதிரியான ஒரு வீரர். அவர் ஆஸ்திரேலியாவில் ஒரு கோடை காலத்தில் இரண்டு முறை கவர் டிரைவ் விளையாடச் சென்று டெஸ்டில் ஆட்டம் இழந்தார். பிறகு சிட்னியில் அந்த முறையில் விளையாடாமல் விளையாடி இரட்டை சதம் அடித்தார். ஆனால் இவர்கள் இருவருமே வேறு மாதிரியானவர்கள். விராட் கோலியின் மிகப்பெரிய பலமே சச்சினை விட வித்தியாசமான முறையில் விளையாடுவதுதான்” என்று கூறியிருக்கிறார்.