இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நயவஞ்சகர் என்றும் அவர் சொன்னதை செய்ய மாட்டார் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கடுமையான குற்றம் சாட்டி இருக்கிறார்.
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பயிற்சியாளராக கம்பீர் எதையும் செய்யவில்லை என்றும், அவருடைய பயிற்சியாளர் குழுவும் எதையும் செய்யவில்லை என்றும் மனோஜ் திவாரி விமர்சனம் செய்திருக்கிறார்.
கம்பீர் – மனோஜ் திவாரி பிரச்சனை
இவர்கள் இருவருமே கடந்த காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடினார்கள். கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து விளையாடிய காலகட்டத்தில் அந்த அணி ஐபிஎல் கோப்பையை கம்பீர் தலைமையில் வென்றது. பிறகு இருவருக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக, கொல்கத்தா அணி நிர்வாகம் மீண்டும் மனோஜ் திவாரியை ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் குறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது “இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரால் என்ன பயன்? அவர் கம்பீர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்பார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து மோர்கல் வந்திருக்கிறார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இருந்து கம்பீருடன் வேலை செய்த அபிஷேக் நாயர் வந்திருக்கிறார். கம்பீர் இப்போது ஒரு வசதியான ஜோனில் இருக்கிறார் அவ்வளவுதான்”
கம்பீர் ஒரு நயவஞ்சகர்
“கம்பீர் ஒரு நயவஞ்சகர். அவர் சொன்னதை எப்பொழுதும் செய்யவே மாட்டார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மும்பை மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை. இப்பொழுது ஏற்பட்டிருக்கும் எல்லா பிரச்சனைக்கும் ரோகித் சர்மா முன்னே தள்ளப்படுகிறார்”
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி 15 பேர் கொண்ட இந்திய அணி.. ஆகாஷ் சோப்ரா தேர்வு.. சூர்யா சாம்சனுக்கு இடமில்லை
“ரோகித் மற்றும் கம்பீர் இருவரும் எப்படி ஒன்றாக வேலை செய்வார்கள்? ரோகித் சர்மா உலகக் கோப்பையை வென்ற கேப்டன். இவர் ஐபிஎல் தொடரில் அணியை வழிநடத்தி இரண்டு முறை கோப்பையை வென்ற கேப்டன். அதனால் சரி வராது. மேலும் இவர் மட்டுமே கொல்கத்தா அணியை வழிநடத்தி நாங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. ஜாக் காலிஸ், சுனில் நரைன், நான் உள்பட எல்லோரும் பங்களித்துக் கோப்பையை வென்றோம். ஆனால் இறுதியில் கிரெடிட் யாருக்கு கிடைத்தது? கம்பீர்தான் எடுத்துக் கொண்டார்” என்று கூறி இருக்கிறார்.






