தோனி கேப்டனா அசத்திட்டார்.. நேத்து அவர் செஞ்ச இந்த ஒன்னுதான் வெற்றிக்கு காரணம் – மைக்கேல் கிளார்க் பேட்டி

0
285
Dhoni

நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே கேப்டன் தோனியின் கேப்டன்சி மிகவும் சிறப்பாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டி கூறியிருக்கிறார்.

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் அஸ்வின் மற்றும் கான்வே இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுடைய இடத்திற்கு ஷேக் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் இருவரும் கொண்டுவரப்பட்டார்கள். இந்த மாற்றம் நேற்று சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவி செய்வதாக இருந்தது.

- Advertisement -

ருதுராஜ் செய்திருந்த தவறு

சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் முன்பு அஸ்வின் மற்றும் நூர் அகமத் இருவரும் இருந்த காரணத்தினால், ரவீந்திர ஜடேஜாவை பந்துவீச்சில் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் நேற்று அஸ்வின் இல்லாத காரணத்தினால் வழக்கம்போல் ரவீந்திர ஜடேஜாவை நல்ல முறையில் தோனியால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அஸ்வின் இல்லாதது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று நேற்று பார்க்க முடிந்தது. மேலும் பவர் பிளேவில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்து சிறப்பான முறையில் தோனி முடித்திருந்தார். வந்து வீச்சாளர்களை சரியான இடங்களுக்கு கொண்டு வந்து சிறப்பாக பயன்படுத்தினார். இதைத்தான் கேப்டனாக ருதுராஜ் தவற விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தோனி செய்த முக்கிய காரியம்

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” நேற்று இரவு நடந்த விஷயம் மிகவும் சிறப்பானது. தோனியின் கேப்டன்சி மிகவும் அபாரமாக இருந்தது. அவர் சூழ்நிலையை மிகச் சரியாகப் புரிந்திருந்தார். அதற்கு ஏற்றபடி தன்னுடைய திட்டங்களை அமைத்துக் கொண்டார். மிக முக்கியமாக வேகப் பந்துவீச்சாளருடன் இணைந்து சுழல் பந்துவீச்சாளரை வீச வைத்தார். இப்படித்தான் தனது முழு வாழ்க்கையிலும் கேப்டன் பொறுப்பில் தோனி சிறப்பாக இருந்திருக்கிறார்”

இதையும் படிங்க : தோனி உள்ளே வந்ததுமே எனக்கு அந்த விஷயம் தெரிந்து விட்டது.. என் பிளானை மாற்றி விட்டேன் – சிவம் துபே பேட்டி

“தோனி எப்பொழுது கேப்டனாக இருந்தாலும் அது மிகச் சிறப்பானதாக இருக்கும். அவருடைய விக்கெட் கீப்பிங் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால் நான் முன்பிருந்தே சொல்லி வருகிறேன் தற்போதும் உலகத்தில் அவர்தான் சிறந்த விக்கெட் கீப்பர். நேற்று இரவு அவர் தனது அபாரமான கேப்டன் மூளையை கொண்டு வந்தார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -