நேற்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். இதில் தோனி உடன் இணைந்து விளையாடிய சிவம் துபே கடைசி நேர ஆட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் கான்வே மற்றும் அஸ்வினை வெளியில் வைத்து விட்டார்கள். இதன் காரணமாக இளம் வீரர் ஷேக் ரசீத்துக்கு வாய்ப்பு கொடுக்க முடிந்தது. மேலும் ஜேமி ஓவர்டன் உள்ளே கொண்டுவரப்பட்டார். இதனால் பவர் பிளேவில் வேகப்பந்து வீச்சாளர்கள் முழுவதுமாக பந்து வீசுவதற்கான வாய்ப்பு அமைந்தது. தோனியும் கேப்டனாக பந்துவீச்சாளர்களை சரியான இடங்களில் பயன்படுத்திக் கொண்டார்.
ஐந்து ஓவர் 56 ரன்கள்
நேற்றைய போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணிக்கு 49 பந்துகளில் 63 ரன்களை கேப்டன் ரிஷப்மென்ட் எடுத்து கொடுத்தார். இதன் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. சராசரியாக இந்த விக்கெட்டில் குறைந்தபட்சம் 180 ரன்கள் தேவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி 15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிருந்து சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு 56 ரன்கள் 5 ஓவர்களில் தேவைப்பட்டது. அப்பொழுது களத்தில் சில பந்துகளை சந்தித்து செட் ஆகி இருந்த சிவம் துபே இருந்தார். பதினைந்தாவது ஓவரின் இறுதிப்பந்தில் விஜய் சங்கர் ஆட்டம் இலக்க மகேந்திர சிங் தோனி விளையாட வந்தார்.
11 பந்துகளில் போட்டியை முடித்த தோனி
நேற்று உள்ளே வந்தது முதல் டோனி எடுத்ததும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். போட்டியை கடைசிவரை எடுத்து செல்லும் அவருடைய வழக்கமான பாணியில் இருந்து கொஞ்சம் மாறினார். அவரிடமிருந்து ஆரம்பத்திலேயே நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் வந்தது. இறுதியாக 11 பந்துகளை சந்தித்த அவர் ஆட்டம் இழக்காமல் 26 ரன்கள் எடுத்தார். சிவம் துபே ஒரு முனையில் மிகவும் நிதானமாக விளையாடி 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : நேத்து சம்பவத்தை.. தோனி வாழ்க்கை வரலாறு படத்திலயே பார்த்துட்டேன் – சூரியகுமார் யாதவ் வித்தியாச வாழ்த்து
இதுகுறித்து சிவம் துபே பேசும்பொழுது “தோனி உள்ளே வந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கும் பொழுதே என்னுடைய வேலை எளிதாகிவிட்டது என்று தெரிந்து விட்டது. அந்த நேரத்தில் என்னுடைய வேலை என்பது என்னவென்றால், நான் பெரிய ஷாட்க்கு கடினமாக பந்தை அடிப்பதற்கு போய் ஆட்டம் இழக்க கூடாது. அவருடன் இருந்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்” என்று கூறியிருக்கிறார்.