இந்திய கிரிக்கெட்

சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார்.. இத மட்டும் அவருக்கு கொடுங்க மீதிய பாத்துக்குவார் – மைக்கேல் கிளார்க் கருத்து

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்காக விளையாடும் சாய் சுதர்சன் தனக்கு ஒரு சூப்பர் ஸ்டார் என ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சாய் சுதர்ஷன் மொத்தம் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பையை வென்று அசத்தினார். மேலும் இவர் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணியில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருக்கிறார்.

சாய் சுதர்சன் சூப்பர் ஸ்டார்

இவர் குறித்து பேசி இருக்கும் மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது “எனக்கு இந்த பையன் சாய் சுதர்சன் ஒரு சூப்பர் ஸ்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியில் அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன். மேலும் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் சரியான நேரத்திற்கு உள்ளே வருவார் என்றும் நினைக்கிறேன். தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருக்கிறார், அவருக்கு இங்கிலாந்து தொடரில் முதல் வாய்ப்பு கிடைக்கப் போகிறது”

“மேலும் அவர் எடுத்ததுமே நேரடியாக மூன்றாவது இடத்திற்கு பேட்டிங் செய்ய வர முடியும். அவர் தொழில்நுட்ப ரீதியாக வலிமையான பேட்ஸ்மேன். மேலும் அவரிடம் எல்லா வகையான ஷாட்களும் இருக்கிறது. மேலும் அவர் மன ரீதியாகவும் தயாராக இருக்கிறார். அவர் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பேட்ஸ்மேன்”

- Advertisement -

முக்கிய பவுலர் இவர்தான்

“குல்தீப் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் கிடையாது. ஆனால் இந்திய டெஸ்ட் அணியில் முதல் ஸ்பின்னர் ஆக அவர்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இங்கிலாந்தில் என்னுடைய முதல் சுழல் பந்துவீச்சாளராக அவர்தான் இருப்பார். அவர் விக்கெட் வீழ்த்தக்கூடிய எக்ஸ்பேக்ட்டராக மாறுவார்”

இதையும் படிங்க : இந்தியா ஏ vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது டெஸ்ட்.. கேஎல் ராகுலுக்கு தொடக்க வீரராக இடம்.. 3வது இடத்திற்கு டிவிஸ்ட்

“அவர்தான் இங்கிலாந்து தொடரில் முக்கியமான பவுலராக இருக்கப் போகிறார். பேட்டர்களைப் பற்றிய அவருடைய புரிதலும் பார்வையும் மிகப்பெரிய அளவுக்கு முன்னேறி இருக்கிறது. விக்கெட் கைப்பற்றுவதற்கு தேவையான அளவுக்கு அவருக்கு தைரியமும் பந்துவீச்சில் இருக்கிறது. அவர் கடினமான நேரங்களிலும் பந்து வீசி இருக்கிறார். அவருடைய பந்துவீச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by