இந்தியா ஏ vs இங்கிலாந்து லயன்ஸ் 2வது டெஸ்ட்.. கேஎல் ராகுலுக்கு தொடக்க வீரராக இடம்.. 3வது இடத்திற்கு டிவிஸ்ட்

0
394
Rahul

இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிரான 2வது 4நாள் ஆட்ட டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இதில், இந்தியா ஏ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், கேஎல் ராகுலை தொடக்க வீரராக இடம்பெறச் செய்ய, தாம் 3வது வீரராக களமிறங்கினார்.

பச்சை பசேல் என ஆடுகளம் புற்களால் மூடப்பட்டு இருந்தது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில், இந்திய வீரர்கள் பேட்டிங் செய்ய தடுமாறினர். ஜெய்ஸ்வால் 26 பந்தில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங்கிற்கு வந்த ஈஸ்வரன், 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், ஜெய்ஸ்வால் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் இந்தியா ஏ அணிக்காக இரண்டு இன்னிங்ஸ்களிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் சோபிக்காத இந்த ஜோடி, இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடியது.

தொடக்க வீரராக ராகுல்:

இருப்பினும், ராகுல் இந்த பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க விரும்பியதால், பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது. ராகுல், 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித் ஷர்மா முதல் டெஸ்டில் இல்லாதபோது தொடக்க வீரராக களமிறங்கி, சிறப்பாக செயல்பட்டு தொடரின் பெரும்பாலான போட்டிகளில் தொடக்க வீரராக ஆடினார்.

- Advertisement -

இந்தியாவின் டெஸ்ட் தொடக்க வீரராக தன்னை நிலைநிறுத்திய ஜெய்ஸ்வால் உடன் ராகுல் தொடக்க வீரராக தொடர முடிவு எடுத்துள்ளாத தெரிகிறது.
ராகுல் ஆரம்பத்தில் இந்திய அணியுடன் இன்று இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தார். மே மாதம் அணி அறிவிக்கப்பட்டபோது, டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2025 பிளேஆஃப்களுக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்பிருந்தது.

முன்பே இங்கிலாந்து சென்ற ராகுல்:

எனவே, டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற உதவுவதற்கு முழு முயற்சியுடன் பங்கேற்றார்.18வது ஐபிஎல் தொடரில் டெல்லி அணி வெளியேறிய பிறகு, ராகுல் இங்கிலாந்து நிலைமைகளைப் புரிந்து கொள்ளவும், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி பெறவும், இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில் ஆடுவதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார்.

இதையும் படிங்க: அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் பியூஷ் சாவ்லா.. 2 உலக கோப்பையை வென்ற பவுலர்

இதில் ராகுல் சிறப்பாக செயல்பட்டு, தனது திறனை நிரூபித்தால், அவரே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கருண் நாயர் நடுவரிசையில் களமிறங்க போகிறார். அபிமன்யூ ஈஸ்வரன் 3வது வீரராக விளையாடியதன் மூலம், இவருக்கு தான் முன்னூரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சாய் சுதர்சன் வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்க வேண்டியது வரும்.

- Advertisement -