தோனி தனது சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமா இந்த வேலையை செய்யுறாரு.. குற்றம் சொல்ல முடியாது – ஆஸி கிளார்க்

0
157

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் எம்எஸ் தோனி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோனியின் மீதான விமர்சனம்

இந்த ஐபிஎல் தொடரில் அன் கேப்டு பிளேயராக மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்கு விளையாடி வருகிறார். இந்த ஆண்டு அவரை 4 கோடி ரூபாய்க்கு சென்னை அணி தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் எம்.எஸ். தோனி பெங்களூர் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 9வது இடத்திலும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 7வது இடத்திலும் களம் இறங்கி விளையாடினார்.

மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு போட்டிகளில் தோனி விளையாடினாலும் அது அணி வெற்றி பெறுவதற்கு போதுமானதாக அமையவில்லை. இந்த சூழ்நிலையில் அவர் மீது தற்போது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தோனி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

மைக்கேல் கிளார்க் ஆதரவு

இது குறித்து கிளார்க் விரிவாக கூறும்போது ” மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு நல்ல வீரர், அவர் இன்னும் ரன்கள் எடுத்து வருகிறார். எனவே அவர் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள், அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் மற்ற வீரர்கள் பொறுப்பேற்கும் நிலை எப்போது வரும்? அவர் 50 வயதிலும் விளையாடுவாரா? அணியில் இப்போது அவரது பங்கு முடிந்தவரை பேட்டிங் செய்வது விக்கெட் கீப்பராக செயல்படுவது, கேப்டனாக இருப்பது மட்டுமல்ல. இது முற்றிலும் மாறிவிட்டது தோனி தற்போது கிரிக்கெட் வாழ்க்கையின் பின்பகுதியில் இருக்கிறார்.

இதையும் படிங்க:விராட் கோலி இதை எப்படி சமாளிக்க போறார்னு பார்க்க ஆர்வமா இருக்கேன்.. அவருக்கு பலவீனம் தெரியும் – இர்பான் பதான்

ஐபிஎல் தொடரில் அவர் இன்னும் சிறந்த விக்கெட் கீப்பர், யார் என்ன சொன்னாலும் அது குறித்து எனக்கு கவலையில்லை. அவர் இன்னும் விளையாடுவதற்கு ஒரு விசித்திரமான வீரர். சென்னை அணியும் தற்போது அவருக்கு அதிக பணம் கொடுப்பதில்லை. எனவே விக்கெட் கீப்பிங் பொறுத்தவரை தோனி செய்யும் விக்கெட் கீப்பிங் அவரது சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமாகும். மேலும் அவர் இயல்பாகவே தலைமைத்துவத்திற்கு உதவி வருகிறார்” என்று கிளார்க் கூறி இருக்கிறார்.

- Advertisement -