விராட் கோலி இதை எப்படி சமாளிக்க போறார்னு பார்க்க ஆர்வமா இருக்கேன்.. அவருக்கு பலவீனம் தெரியும் – இர்பான் பதான்

0
52

இன்று நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாட உள்ளன.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத் பெங்களூர் மோதல்

இந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் வலுவான அணியாக இருந்து வருகிறது. பெங்களூர் அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி, அதற்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இன்று நடைபெற உள்ள மூன்றாவது ஆட்டத்தில் குஜராத் அணி சின்னசாமி மைதானத்தில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பெங்களூர் அணிக்காக விளையாடி வந்த முகமது சிராஜ், தற்போது ஆர்சிபி அணிக்கு எதிராக இந்த போட்டியில் விளையாடப் போகிறார். எனவே இந்த போட்டியில் முக்கிய அம்சமாக விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் இடையேயான போட்டியை தான் பார்க்க ஆவலாக இருப்பதாக இர்பான் பதான் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி பார்க்க ஆர்வமா இருக்கு

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்த ஆட்டத்தில் ஒரு திடமான உணர்ச்சி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. முகமது சிராஜ் தற்போது சின்னசாமி மைதானத்திற்கு திரும்புகிறார் ஆனால் இப்போது சிவப்பு நிற ஜெர்சி இல்லை. இந்தப் போட்டியில் நான் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விராட் கோலி மற்றும் முகமது சிராஜ் இடையேயான போர் ஆகும். சிராஜ் இப்போது தனது பூட்ஸில் இருந்து பந்த வீச வேண்டி இருக்கும்.

இதையும் படிங்க:அடிச்சு சொல்றேன்.. ரிக்கி பாண்டிங் சொல்லாம பிரப்சிம்ரனின் அந்த விஷயம் நடந்திருக்காது – மைக்கேல் வாகன் பேச்சு

விராட் கோலியின் பலவீனத்தை பயன்படுத்தி எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எனவே ஸ்டம்புக்கு தொடர்ந்து வெளியே சிராஜ் பந்து வீச வேண்டும். விராட் கோலி அதை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பது மற்றொரு சுவாரசியமான அம்சமாகும். ஹாசில் வுட் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 48 பந்துகளை வீசியுள்ளார். ஆனால் ஒன்று கூட இதுவரை ஸ்டம்பை தாக்கவில்லை. கில் ஒரு நல்ல லென்த் பந்தை எதிர்கொண்டால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100ஆக இருக்கும். குறைவான லெந்த் ஆக இருந்தால் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருக்கும். எனவே இது ஒரு முக்கிய போட்டி” என்று அவர் கூறி இருக்கிறார்.

- Advertisement -