போன மேட்ச் சிஎஸ்கே கிட்ட தோத்ததுக்கு, இந்த முறை மும்பை பழி வாங்குவாங்க! – தமிழகத்தைச் சேர்ந்த பத்ரிநாத் கருத்து!

0
1274

கடந்த முறை சிஎஸ்கே அணியிடம் தோல்வியை தழுவியதற்கு இம்முறை சேப்பாக்கம் மைதானத்தில் பழிவாங்குவார்கள் என்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் சுப்பிரமணியம் பத்ரிநாத்.

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் பலரும் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மூலம் போட்டி தான். இரண்டு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்றுள்ள அணிகளாக இருந்து வருவதால் இவர்கள் இருவரும் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும்.

- Advertisement -

அந்த வகையில் இந்த சீசனில் ஏற்கனவே மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஜிங்கியா ரகானே, ஜடேஜா மற்றும் ருத்துராஜ் ஆகியோர் அபாரமாக செயல்பட்டுக்கு கொடுக்க, ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனில் இரண்டாவது முறையாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசியாக 2010 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி வீழ்த்தியது. கிட்டத்தட்ட 13 வருடங்களாக மோசமான வரலாற்றை மும்பை அணிக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி வைத்திருக்கிறது.

இந்த மோசமான வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த வருடம் வெற்றி பெறுமா? இல்லை, இந்த மோசமான வரலாறு தொடருமா? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் நிலையில், பலரும் எந்த அணி வெற்றி பெறும்? என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் சிஎஸ்கே வீரரும், முன்னாள் இந்திய வீரருமான தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசியதாவது:

- Advertisement -

“மும்பை அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியதற்காக சிஎஸ்கே அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி பழிவாங்கும். இதற்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது சிஎஸ்கே அணியில் இருக்கும் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

சுழல்பந்து வீச்சாளர்களை வைத்து தோனி பல திட்டங்கள் வகுத்து வருகிறார். ஆனால மும்பை இந்தியன்ஸ் அணியில் பேட்ஸ்மேன்கள் சமீபத்தில் இருக்கும் ஃபார்மிற்கு முன்னர் தோனியின் திட்டங்கள் எடுபடாது என்று தோன்றுகிறது. கடைசியாக நான் சிஎஸ்கே அணிக்கு விளையாடிய போது சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 2010 ஆம் ஆண்டு வீழ்த்தினார்கள். அதன் பிறகு மும்பை அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் மோசமான ரெக்கார்டு வைத்திருக்கிறார்கள். இதுவும் போட்டியில் பிரதிபலிக்கும்.” என்றார்.