4வது ஸ்டம்ப் லைனில் பந்து வீச சொல்லி கோலி சொன்னாரா? டெல்லி வீரரின் சுவாரசிய பதில்.. ரஞ்சி டிராபி 2025

0
444

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 13 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார்.

இந்த சூழ்நிலையில் அதே டெல்லி அணியில் விளையாடும் நவ்தீப் சைனி விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரஞ்சி தொடரில் விராட் கோலி

விராட் கோலி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மோசமான பேட்டிங் ஃபார்மில் இருப்பதை தொடர்ந்து அவரை உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடும் படி இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவுறுத்தியது. ஏனென்றால் சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் விராட் கோலியின் பார்ம் மிக மோசமான பேட்டிங் சரிவை கண்டது. விராட் கோலியை தொடர்ந்து ஒரு ரோகித் சர்மா மற்றும் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் உள்நாட்டுத் தொடர்களில் விளையாடும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 8 முறை அவுட் சைடு ஆப்ஸ் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை விளையாட சென்று அவுட் ஆகி வெளியேறினார். இந்த சூழ்நிலையில் நாளை டெல்லி அணிக்காக ரஞ்சிப் போட்டியில் விராட் கோலி விளையாட உள்ள நிலையில், அவரது சக வீரரான நவ்தீப் சைனியிடம் பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் விராட் கோலி நான்காவது ஸ்டம்ப் லைனில் பந்துகளை வீசச் சொல்லி அறிவுறுத்தினாரா? என்று கேட்டதற்கு சுவாரசியமான பதில்களை அளித்திருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அப்படி எதுவும் இல்லை. நாளைய போட்டிக்கு தயாராகும் விதமாக நான் எனது சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளை என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன், மேலும் விராட் கோலி பாய் என்னுடைய அணியில் இருக்கிறார். நாங்கள் பயிற்சி செய்யும் போது அது எப்போதுமே ஒரு போட்டி போல இருக்கும். நான் விராட் கோலி உடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். அவரோடு இணைந்து விளையாடுவது எனக்கு மிக வேடிக்கையாக இருக்கும்.

இதையும் படிங்க:என்னோட டெஸ்ட் அறிமுகத்துக்கு முன்.. ராகுல் சாரிடம் இதுக்காக மன்னிப்பு கேட்டேன் – ஆகாஷ் தீப் பேட்டி

நான் அவருடன் விளையாட தொடங்கியதிலிருந்து ஒரு நல்ல வீரரை வெளியேற்றவும், ஒரு நல்ல பந்தை வீசவும் எப்போதும் வாய்ப்புள்ளது. எனவே இப்போதும் அதே நிலை தான், நான் எனது வேலையை சரியாக செய்ய வேண்டும். தற்போது நிறைய மாறிவிட்டது விராட் கோலி ஒரு ஜாம்பவான் அவரோட ட்ரெஸ்ஸிங் ரூமில் மற்ற சிறுவர்கள் பகிர்ந்து கொள்வது ஒரு மிகப்பெரிய அனுபவம். இது எங்கள் அணிக்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்ட்” என்று கூறுகிறார்.

- Advertisement -