133 ரன் 74 பந்து.. எம்ஐ அபார பேட்டிங்.. முன்னாள் ஆர்சிபி வீரர் ஏமாற்றம்.. 95 ரன் வித்தியாசத்தில் கேப்பிட்டல்ஸ் தோல்வி எஸ்ஏ டி20

0
46

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ் ஏ டி 20 கிரிக்கெட் லீக் தொடரின் 30 ஆவது ஆட்டத்தில் எம்ஐ கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய எம்ஐ அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக்

கேப்டவுனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி தொடக்க வீரர்களாக சிதிக்குல்லா அடல் மற்றும் கோனார் எஸ்டேரிலன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 133 ரன்கள் குவித்தது. அடல் 46 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸ் என 74 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் கோனார் 69 ரன்கள் வெளியேற கேப்டன் இன்கிராம் 7 ரன்னில் நடையை கட்டினார்.

அதற்குப் பின்னர் களமிறங்கிய டிலானோ 15 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். இதனால் எம்ஐ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் நீசம் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் பெஹன்ட்ராப் மற்றும் பீட்டர்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். எம்ஐ அணியில் கேப்டன் ரஷித் கான் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கியது.

- Advertisement -

எம்ஐ அணி சிறப்பான வெற்றி

இதில் தொடக்க ஆட்டக்காரர் வில் ஜாக்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் ஸ்டீவ் ஸ்டோல்க் 8 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்களில் வில் ஸ்மீத் 15 ரன், கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் வெரின் 7 ரன், அகர்மேன் டக் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய வீரர்களில் கேச்சட் 17 ரன் மற்றும் நீசம் 32 ரன்னில் வெளியேறினார்கள். நேசம் 24 பந்துகளை எதிர் கொண்டு ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸ் 32 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:ராணா விவகாரம்.. இன்னைக்கு துபே கண்டிப்பா இத பண்ணிருப்பாரு.. 260 ரன் தான் எங்களுக்கு வேணும் – கம்பீர் பேட்டி

பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இதனால் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி 14 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனால் எம்ஐ அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. பந்துவீச்சை பொறுத்தவரை டேன் பீட் மூன்று விக்கெட் மற்றும் தாமஸ் கெபார் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடவில்லை எம்ஐ அணி கம்பீரமாக முதலிடத்தில் இருக்கிறது. நாளை நடைபெற உள்ள முதல் குவாலிஃபயர் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்த்து எம்ஐ விளையாட உள்ளது.

- Advertisement -