ரொம்ப உஷாருபா நீ.. சிவம் துபே வெளியிட்ட மெர்சலான சிஎஸ்கே ஆல் டைம் பிளேயிங் லெவன்!

0
2159
CSK

2018 ஆம் ஆண்டு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தின் சிக்க, இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அவரது இடத்திற்கு ஒரு வீரரை தேட ஆரம்பித்தது. அப்பொழுது கிடைத்தவர்தான் மும்பை மாநிலத்திற்காக விளையாடி வந்த இடதுகை பேட்டிங் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிவம் துபே!

இவர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி, இடையில் ஒரே ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தோடு தனது கடைசி சர்வதேச போட்டியை விளையாடி முடித்துக் கொண்டிருக்கிறார். மொத்தமாக இவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை நான்கு மாதங்கள் மட்டுமே நீடித்தது.

- Advertisement -

இந்த நிலையில் 2019 மற்றும் 20ம் ஆண்டில் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ஆனால் இவரது செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு ஐபிஎல் தொடரில் இல்லை. இதற்கு அடுத்து 2021 ஆம் ஆண்டு 4.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை வாங்கியது.

இதற்கு அடுத்து கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது. இதற்குப் பிறகுதான் இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட ஆரம்பித்தது என்று கூறலாம்.

கடந்த ஆண்டு இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 14 இன்னிங்ஸ்கள் விளையாடி, 37 ரன் ஆவரேஜில், 160 ஸ்ட்ரைக் ரேட்டில், மூன்று அரை சதங்களுடன் 411 ரன்கள் குவித்தார். இதில் வெறும் 12 பவுண்டரிகள் அடித்த அவர், 35 சிக்ஸர்கள் அடித்து தன்னை மிகப் பெரிய பவர் ஹிட்டராக முன்னிறுத்தினார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்த பிறகு மேம்பட்ட இவரது பேட்டிங் திறமையின் காரணமாக, தற்பொழுது ருதுராஜ் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் இவர் எல்லா காலத்திற்குமான 11 பேர் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னம்பிக்கையோடு தனது பெயரையும் சேர்த்து இணைத்து இருக்கிறார். மேலும் தமிழக வீரர் பாலாஜிக்கும் இந்த அணியில் இடம் தந்திருக்கிறார்.

சிவம் துபேவின் ஆல்- டைம் சிஎஸ்கே XI: மேத்யூ ஹைடன், மைக்கேல் ஹஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அல்பி மோர்கல், ஷிவம் துபே, டுவைன் பிராவோ, ஹர்பஜன் சிங், லட்சுமிபதி பாலாஜி.