இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. மேலும் 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான இருதரப்பு தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கிறது.
மூன்றாவது போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீக்சானா இலங்கை அணியின் வெற்றி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இலங்கை அணியின் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்கள் குவித்தார். பந்து வீச்சு தரப்பில் இந்திய அணியின் அறிமுக வீரர் ரியான் பராக் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதை அடுத்து வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது.
இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்ததால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி 138 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணியின் வெல்லால்கே ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த நிலையில் இலங்கை அணியின் வெற்றி குறித்து தீக்சனா பேசும் போது “இந்த வெற்றி ஒரு அணியாக என்னை பொறுத்தவரை எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். டி20 தொடரை 3- 0 என்ற கணக்கில் தோல்வியடைந்தோம். இதனால் நாங்கள் ஒட்டுமொத்தமாக ஏமாற்றமடைந்த நிலையில் அதை ஒரு உந்துதலாக எடுத்துக் கொண்டோம். கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று 1997ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை வென்று இருக்கிறோம். இலங்கை அணியின் பிளேயிங் லெவனில் இருந்தது எனக்கு மகிழ்வை தருகிறது. இந்திய அணி பெரும்பாலும் பேட்டிங் விக்கெட் மற்றும் சிறிய பவுண்டரி லைன் கொண்ட இந்திய ஆடுகளங்களில் விளையாடுகிறது.
பிரேமதேசா ஆடுகளத்தில் சுழலுக்கு சாதகமாக இருந்தால் அது கூடுதல் வாய்ப்பை கொடுக்கும் என்று எங்களுக்கு தெரியும். உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் கூட ஆடுகளம் இது போலத்தான் இருக்கும். அதில் எவ்வாறு பேட்டிங் செய்வது என்று எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு தெரியும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது இரண்டு விக்கெட்களுக்கு பிறகு ஆடுகளம் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ரோகித் சர்மா என்னை அட்டாக்கிங் செய்த ஆடினார். அசித்தா கம்பேக் கொடுத்து கில் விக்கட்டை வீழ்த்தினார். மேலும் வெல்லால்கே சிறப்பாக பந்து வீசினார்.
இதையும் படிங்க:இது உலகின் முடிவு கிடையாது.. மனநிறைவு ஏற்பட வாய்ப்பே இல்லை.. இதனால் தோற்றோம் – ரோகித் சர்மா பேட்டி
வான்டர்ஸே சிறப்பான பங்களிப்பை அளித்தார். அசலன்கா எக்கனாமிக்கலாக நன்றாக வீசினார். நான் அதிகமாக டாட் பால்களை வீச ஆரம்பித்தேன். ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டதால் 2-0 என்ற கணக்கில் எங்களால் வெற்றி பெற முடிந்தது” என்று கூறியிருக்கிறார்.