உலக கோப்பை வரலாற்றில் 2 மெகா ரெக்கார்டுகள்.. ரோகித் சர்மா புது வரலாறு!

0
2938
Rohit

2023 ஆம் ஆண்டின் 13 வது உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. பாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய இந்தியா ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது. இந்திய அணியின் துவக்க வீரர் கில் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்தியாவை ஆரம்ப சரிவிலிருந்து மீட்க போராடினர். வணக்கம் போல் அதிரடியாக விளையாடிய ரோகித் 31 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் இந்தியா 81 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்நிலையில் கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் இணைந்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். நான்காவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 67 ரன்கள் சேர்த்த நிலையில் 54 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 9 ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 182 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து மீண்டும் தடுமாறியது.

தற்போது கேஎல் ராகுல் 60 ரன்னிலும் சூரியகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் இந்திய அணியை மீட்க போராடி வருகின்றனர். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் ரோகித் சர்மா இன்று புதியதாக இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறார். முன்னதாக இன்று அவர் அடித்த 47 ரன்களின் மூலம் இந்த வருட உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் விளையாடி 597 ரன்கள் எடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடப்பு உலக கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் .

மேலும் கேப்டனாக இருந்து ஒரு உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா. இதற்கு முன்பு இந்த சாதனையை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நிகழ்த்தியிருந்தார். அந்த உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் ஆடிய வில்லியம்சன் 578 ரன்கள் சேர்த்திருந்தார். இந்தியாவுடன் ஆன லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக்கோப்பையில் 597 ரன்கள் எடுத்திருப்பதன் மூலம் ரோகித் சர்மா கேன் வில்லியம் சனி சாதனையை முறியடித்து ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனை மற்றும் குமார சங்ககாரா இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது 465 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரோகித் சர்மா மற்றொரு சாதனையாக அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். குறைந்தபட்சம் 500 ரன்கள் எடுத்து அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். இந்த வருட உலகக்கோப்பையில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மாவின் ஸ்ட்ரக் ரேட் 125.9. இவருக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் இந்திய அணியின் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரிடம் பெற்றுள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 113.2. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்தின் வீரர் டெரில் மிட்செல். இவரது ஸ்ட்ரைக் ரேட் 110.