152 ரன்.. ரிங்கு சிங் சென்சிபிள் கேப்டன் இன்னிங்ஸ்.. சிஎஸ்கே சமீர் ரிஸ்வி அணி தோல்வி.. உபி டி20 லீக்

0
17
Rinku

தற்போது நடைபெற்று வரும் உத்தர பிரதேஷ் டி20 லீக்கில் சமீர் ரிஸ்வி அணியும் ரிங்கு சிங் பணியும் மோதிக் கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் ரிங்கு சிங்கின் பொறுப்பான ஆட்டத்தால் அவர் தலைமை தாங்கும் அணி அபார வெற்றி பெற்றது.

நேற்று உத்தர பிரதேஷ் டி20 லீக்கில் சமீர் ரிஸ்வி கேப்டனாக இருக்கும் கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணியும், ரிங்கு சிங் கேப்டனாக இருக்கும் மீரட் மார்வேரிக்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ரிங்கு சிங் தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.

- Advertisement -

சமீர் ரிஸ்வி ஏமாற்றம்

முதலில் பேட்டிங் செய்ய வந்த கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 73 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த சவுரியா சிங் 25 பந்தில் நிதானமாக 27 ரன்கள் எடுத்தார்.

இதன் காரணமாக கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் இதற்குப் பின் வந்த எந்த பேட்ஸ்மேன்களும் அந்த அணிக்கு நல்ல முறையில் விளையாடவில்லை. கேப்டன் சமீர் ரிஸ்வி 12 பந்தில் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு கான்பூர் சூப்பர் ஸ்டார்ஸ் அணி 152 ரன்கள் எடுத்தது. ஜீசன் அன்சாரி நான்கு ஓவர் பந்துவீசி 26 ரன் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

ரிங்கு சிங் கேப்டன் இன்னிங்ஸ்

இலக்கை நோக்கி விளையாடிய மீரட் மார்வேரிக்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஆகாஷ் துபே ரன் ஏதும் இல்லாமலும், ஸ்வஸ்திகா சிகாரா 13 பந்தில் 23 ரன்கள் எடுத்தும் வெளியேறினார்கள். மாதவ் கௌஷிக் 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். நான்காவதாக வந்த ரிதுராஜ் சர்மா ஒரு ரன்னில் வெளியேறினார்.

அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகள் விழுந்ததால் மீரட் அணி நெருக்கடியில் சிக்கியது. இந்த நிலையில் விக்கெட் கீப்பர் உவைஸ் அகமத் மற்றும் கேப்டன் ரிங்கு சிங் இருவரும் சேர்ந்து பொறுப்பான முறையில் விளையாடிய அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

இதையும் படிங்க : கோலி பும்ராவ போல கிடையாது.. அவர் போலி வில்லன்.. கோப்பை எங்களுக்குதான் – ஆஸி லெஜன்ட் பேச்சு

சிறப்பாக விளையாடிய உவைஸ் அகமத் 34 பந்தில் மூன்று பவுண்டரி இரண்டு சிக்சர் உடன் 48 ரன், ரிங்கு சிங் 35 பந்தில் நான்கு பவுண்டரி இரண்டு சிக்ஸர்களுடன் 48 ரன் என ஆட்டம் இழக்காமல் இருவரும் எடுக்க, மீரட் அணி 17.4 ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கான்பூர் அணி தரப்பில் ரிஷப் ராஜ்புத் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -