“எனக்கும் ஷாகின் அப்ரிடிக்கும் மோதலா?..!” – முதல்முறையாக மௌனம் கலைத்த கேப்டன் பாபர் அசாம்!

0
1200
Babar

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சூழல்களைப் புரட்டிப் போட்டது போல், உலகக்கோப்பை தொடர் தோல்வி கூட அவர்களை அப்படி செய்திருக்காது என்றே கூறலாம்.

காரணம், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு உலகத்தரமாக இருந்தது. மேலும் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். மேலும் முதல் 10 இடங்களில் மேலே பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக ஆசியக்கோப்பை தொடரை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் பாகிஸ்தான் அணிக்கு இருப்பதாகவே பெரும்பாலானவர்களால் கணிக்கப்பட்டது. இதற்கு அடுத்த இடம்தான் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான அணி இந்தியாவிடம் 228 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதையெல்லாம் தாண்டி இலங்கை அணியை வென்றால் இறுதிப் போட்டி என்ற நிலையில், பலவீனமான இலங்கை அணி இடம் தோற்கும் அளவுக்கு பாகிஸ்தான் பலவீனமாக இருந்தது.

இதை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் மட்டும் அல்லாது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பாகிஸ்தான் அணி மீதும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

- Advertisement -

இதில் உச்சகட்டமாக கேப்டன் பாபர் அசாமுக்கும், நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடிக்கும் இடையே, இலங்கை அணி உடனான தோல்விக்குப் பிறகு நடைபெற்ற அணிக் கூட்டத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டது என்றும், முகமது ரிஸ்வான் தலையிட்டு சமாதானப்படுத்தினார் என்றும் செய்திகள் பரவியது.

தற்பொழுது இதுகுறித்து பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் “மரியாதை பொதுவானது. அதை எல்லோருக்கும் தர வேண்டும்.போட்டியை நெருங்கி தோற்கும் பொழுதெல்லாம், நடக்கக்கூடிய வழக்கமான அணிக் கூட்டம்தான் நடைபெற்றது. ஆனால் சில சமயம் சண்டையிட்டுக் கொண்டது போல் வெளியே பரப்பப்படுகிறது.

இப்படி செய்யக்கூடாது. மரியாதை என்பது எல்லோருக்கும் நிலையான ஒன்றாக இருக்க வேண்டும். நாங்கள் எங்கள் அணியில் எங்கள் குடும்பத்தை நேசிப்பதை போலவே ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்!” என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார்!