நானும் டிராவிட் சாரும் இதைப்பற்றி நிறைய பேசிக்கொள்வோம்; சுப்மன் கில் ஓபன் டாக்!!

0
87

ராகுல் டிராவிட் உடன் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவர் என்னிடம் இதைப் பற்றித்தான் நிறைய பேசுவார். நாங்கள் இருவரும் நிறைய பகிர்ந்து கொள்வோம் என்று மனம் திறந்து பேசியுள்ளார் சுப்மன் கில்.

இந்திய அண்டர் 19 அணியில் நன்றாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாமல் விரைவாக இந்திய அணிக்குள் அழைக்கப்பட்டவர் சுப்மன் கில். அணிக்கு நல்ல பங்களிப்பையும் கொடுத்து வருகிறார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய மைதானங்களிலும் நல்ல பங்களிப்பை கொடுத்திருக்கும் இவருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் அபாரமாக செயல்பட்டார். அணிக்கு நல்ல துவக்கம் தேவை, அதே நேரம் துவக்க வீரர்கள் நல்ல ரன் ரேட்டில் விளையாடினால் மட்டுமே விரைவாக எந்த அணியாலும் அதிக அளவில் ரன்களை குவிக்க முடியும். இந்த வகையில் சுப்மன் கில் ஸ்ட்ரைக் ரேட் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து விமர்சனங்களும் சமூக வலைதளத்தை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய சுப்மன் கில் கூறுகையில், “சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எப்போதும் வந்து கொண்டே இருக்கும். அதற்கு செவி சாய்ப்பதில்லை. சரியான விமர்சனத்திற்கு மட்டுமே நான் கவனம் கொடுத்து °, அதனை சரி செய்து கொள்வதற்கும் முற்படுகிறேன். வீண் விமர்சனங்களுக்கு நான் கவனம் செலுத்துவது இல்லை. அதுதான் எனது எதிர்காலத்திற்கும் நல்லது. இல்லையெனில் மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கலாம்.

நானும் ராகுல் டிராவிட்டும் நீண்ட நேரம் உரையாடல் நிகழ்த்திக் கொள்வோம். அப்போது அணியின் சூழல் மற்றும் தனிப்பட்ட மனநிலை ஆகிய இரண்டிலும் மட்டுமே கவனம் செலுத்தினால் போதுமானது. போதுமானவரை அனைவருமே பயிற்சியை மேற்கொள்வர். ஆனால் நல்ல மனநிலையில் இருக்க தவறிவிடுவர். அப்போதுதான் ஆட்டத்தில் தவறுகள் நிகழ்கிறது. எனவே நான் என் மனநிலையை வளர்த்துக் கொள்வதற்கே நிறைய பயிற்சிகள் எடுக்கிறேன்.” என்றார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், “ராகுல் டிராவிட் என்னிடம் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அணிக்கு என்ன தேவை? அணி நிர்வாகம் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது? என்பதையும் தெளிவுபடுத்துகிறார். ஆகையால் என்னால் அதைப் புரிந்து கொண்டு செயல்பட முடிகிறது. அடுத்தடுத்து போட்டிகளிலும் இதனை செயல்படுத்துவேன்.” என்றார்.

டி20 போட்டிகளில் இடம் கிடைக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கொடுத்த அவர், “டி20 போட்டியில் துவக்க வீரர்கள் போதுமான அளவிற்கு இருக்கின்றனர். ஆனால் நான் எனது பங்களிப்பை கொடுத்து வருவேன். நான் சரியான வீரராக தெரிந்தேன் என்றால் அவர்கள் என்னை எடுக்க போகிறார்கள். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் என்னை கவனத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த பொறுப்பை நான் நன்றாக செய்ய வேண்டும் என்பதே எனது இப்போதைய குறிக்கோள்.” என தெளிவு படுத்தினார்.