முதல் போட்டியில் மெக்கலம் 1000வது போட்டியில் ஜெய்ஸ்வால்; “நான் ஆடுற எல்லா ஷாட்டும் ஏற்கனவே பிராக்டிஸ் பண்ணினது!” – சத நாயகன் ஜெய்ஸ்வால்!

0
252
Jaiswal

இன்று விடுமுறை நாளில் ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை பஞ்சாப் அணிகள் மோதியதில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ஆவது போட்டியாகும்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் 21 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஜெய்சுவால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 158 ரன்கள் குவித்து அசத்தினார். இன்று ஆயிரம் ஆவது போட்டியில் ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

சதம் அடித்ததற்கு பிறகு பேசி உள்ள ஜெய்ஸ்வால் ” எனது இன்னிங்ஸின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன் என்று நினைக்கிறேன். நான் சரியாக யோசித்து சரியாக திட்டமிட்டு எனது ஷாட்களை அடித்தேன். நான் விளையாட விரும்பும் அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்துள்ளேன்.

- Advertisement -

நான் ஒவ்வொரு முறை மட்டையை பிடிக்கும் பொழுதும் அது வலையிலோ இல்லை களத்திலோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜூபின் ஸாருடன் நான் மிகவும் உழைத்திருக்கிறேன்.

இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன். பணியில் எனது பங்கை நான் அறிவேன். ரன் ரேட் அதிகமாக இருப்பதை உறுதி செய்து அணிக்கு முடிந்தவரை பங்களிக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!