“இந்தியாவுக்கு எப்படியோ.. எங்களுக்கு திரும்ப அந்த வீரர் இந்திய அணிக்கு வரனும்” – மெக்கலம் பேச்சு

0
233
Virat

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று, தொடர் தற்போது சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் சௌராஷ்டிரா அசோசியேசன் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் மூன்றாவது போட்டியில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இன்றிலிருந்து போட்டி துவங்குவதற்கு நடுவில் எட்டு நாட்கள் உள்ளது. இந்த எட்டு நாட்களில் பயிற்சிக்கான ஒதுக்கப்படும் மூன்று அல்லது இரண்டு நாட்களை கழித்தால், ஐந்தாறு நாட்களில் கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி அணிக்கு திரும்ப வேண்டியதாக இருக்கும்.

ரவீந்திர ஜடேஜா இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முழுமைக்கும் சேர்த்து காயத்தால் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் திரும்ப இனி இந்த தொடருக்கு கிடைக்க மாட்டார்.

கே.எல் ராகுலுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய காயம் விரைவில் குணமடைய கூடியது என்றும் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விராட் கோலி இரண்டாவது குழந்தையின் வருகைக்காக மனைவியுடன் இருக்கிறார் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்திருக்கிறார். இது காரணம் என்றால் விராட் கோலி திரும்புவாரா? என்பதே சந்தேகம்.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கலம் ” விராட் கோலி விளையாட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரின் வருகை இந்திய அணியை பலப்படுத்தும் என்பதில் சந்தேகம் கிடையாது. அவர் வரும்பொழுது இந்திய அணியின் ஆழம் மிக அதிகரிக்கும். நாங்கள் எதிர்த்து விளையாடும் ஒவ்வொரு அணியின் வீரர்களையும் மதிக்கிறோம்.

இதையும் படிங்க : ” கடைசி வரை நிற்க அவர்தான் காரணம்” – U19 WC அரையிறுதி ஆட்டநாயகன் உதய் சகரன் பேச்சு

விராட் கோலி திரும்ப வந்தால் அது நன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தச் சவாலை நாங்கள் விரும்புகிறோம். அவர் ஒரு சிறந்த போட்டியாளர். அவருக்கு எதிராக நான் விளையாடி மகிழ்ந்து இருக்கிறேன். சிறந்தவர்களுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது தனி அலாதியானது. எனவே அவர் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும்; நாங்கள் அவரை எதிர்த்து விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.