நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அறிமுகமானார். மேலும் தன்னுடைய பந்துவீச்சில் அவர் ஒரு முக்கியமான மாற்றத்தையும் செய்திருந்தார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியை லக்னோ அணிக்கு தனி ஒரு வீரராக வென்று கொடுத்தார். மேலும் வேகத்தோடு கட்டுப்பாடு சிறப்பாக இருப்பதால் அவர் அரிய வீரராக தெரிந்தார். எனவே இந்திய அணியில் சீக்கிரம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடிக்கடி ஏற்படும் காயத்திற்கான காரணம்
மயங்க் யாதவ் வேகம் மற்றும் கட்டுப்பாடு இரண்டிலும் மிகச் சிறந்தவராக இருந்த போதிலும் காயம் மட்டும் அவரை விடாமல் துரத்திக் கொண்டே வந்தது. ஐபிஎல் தொடரில் கடந்த வருடங்களில் பயிற்சியின் போதே காயம் அடைந்து வெளியேறினார். மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார்.
இவர் அதிவேகமாக பந்து வீசும் பொழுது ஒரு பக்கமாக உடல் அதிகம் சாய்கிறது. எனவே சாயம் பக்கத்தில் உடலுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இது இந்த அழுத்தத்தின் காரணமாக இவருக்கு உடலின் பக்கவாட்டில் ஒரு பக்கத்தில் காயம் ஏற்படுகிறது. இதுவே இவரது காயத்திற்கான காரணமாக தொடர்ந்து வந்தது.
பந்து வீச்சில் செய்துள்ள மாற்றம்
தற்போது மயங்கி யாதவ் தன்னுடைய பந்துவீச்சு ஆக்ஷனில் ஒரு சிறிய மாற்றத்தை செய்திருக்கிறார். முன்பு அவர் உடலை இடதுபுறமாக பந்து வீசும் பொழுது அதிகம் சாய்ப்பார். தற்பொழுது உடலை எந்த பக்கமும் சாய்க்காமல் நேரான முறையில் வைத்து பந்து வீசுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து இருந்து வந்த உடலின் பக்கவாட்டு ஒரு பக்க காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தற்போது மிகவும் குறைந்திருக்கிறது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : 6,1,6,4,6,4.. சிஎஸ்கே வீரரின் ஒரே ஓவரில் மாறிய போட்டி.. டு பிளெஸ்ஸின் லூசியா கிங்ஸ் அணி சாம்பியன்.. சிபிஎல் 2024 பைனல்
மயங்க் யாதவ் காயம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டால், அடுத்த கட்டமாக அவரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளுக்கு அனுப்பும். அங்கு அவர் காயம் இல்லாமல் பந்து வீசி விட்டால் அடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு அழைக்கப்படுவார் என்பது உறுதி. எனவே அடுத்து தொடங்க உள்ள உள்நாட்டு ரஞ்சி டெஸ்ட் தொடருக்கு மயங்க் யாதவ் சென்றால், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கும் அவரது பெயர் பரிசீலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.